6 Powerful Blood Purifying Foods https://ayurvedham.com
ஆரோக்கியம்

இரத்தத்தை சுத்திகரிக்கும் 6 சக்தி வாய்ந்த உணவுகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ம் உடலில் ஓடும் இரத்தமானது நுரையீரல் மற்றும் அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்ஸிஜனையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டு சேர்க்கும் வேலையை திறம்படச் செய்து வருகிறது. விபத்து நேரத்தில் ஏற்படும் காயத்தின் வழியே குருதி வெளியேறும்போது அந்த இடத்தில் இரத்த உறைவை ஏற்படுத்தி இரத்த இழப்பைக் கட்டுப்படுத்தவும் செய்கிறது.

ஆல்கஹால் மற்றும் ஜங்க் ஃபுட் எடுத்துக் கொள்ளும்போது இரத்தம் மாசடைகிறது. அதன் விளைவாக முகப்பரு, சருமத்தில் வீக்கம் மற்றும் கட்டிகள் உண்டாவதோடு. ஒவ்வாமையும் ஏற்படுகிறது. இரத்தத்தில் சேரும் நச்சுக்களை வெளியேற்ற நாம் உண்ண வேண்டிய ஆறு சக்தி வாய்ந்த உணவுகள் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

பசலை, காலே, சுவிஸ் சார்டு போன்ற இலைக் காய்கறிகளில் பச்சையம் (Chlorophyll) அதிகம் உள்ளது. இது கல்லீரல் இயக்கத்தை மேம்படுத்தவும் இரத்தத்தை சுத்திகரிக்கவும் செய்யும்.

ப்ளூ பெரி, ஸ்ட்ரா பெரி, ராஸ் பெரி ஆகிய பழங்களில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை தீமை புரியக்கூடிய ஃபிரிரேடிகல்களை எதிர்த்துப் போராடவும், மொத்த இரத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவி புரிகின்றன.

பூண்டில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும் குணம் அதிகம் உண்டு. இக்குணமானது இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் உற்பதியைப் பெருகச் செய்து, இரத்தத்தை சுத்திகரிக்கவும் இரத்த ஓட்டம் சீராகப் பாயவும் உதவுகிறது.

மஞ்சளில் குர்குமின் என்றொரு சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமும் மஞ்சளுக்கு உண்டு. இவை இரண்டும் இரத்தத்தை சுத்திகரிக்கவும், இரத்த ஓட்டத்தை சீராகப் பாயச் செய்யவும் உதவி புரிகின்றன.

லெமனில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் வைட்டமின் C யும் அதிகம் நிறைந்துள்ளன. இவை கல்லீரல் இயக்கத்தை மேம்படுத்தவும், இரத்தத்திலுள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகின்றன.

க்ரீன் டீயில் உள்ள கேட்டச்சின் என்ற ஆன்டி ஆக்ஸிடன்ட் இரத்த ஓட்டத்தை சீராகப் பாயச் செய்யவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் செய்கிறது.

எளிதில் கிடைக்கக்கூடிய, மேலே கூறிய ஆறு வகை உணவுகளை நாமும் அடிக்கடி உட்கொண்டு உடல் ஆரோக்கியம் காப்போம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT