headache 
ஆரோக்கியம்

6 வகை தலைவலிகளும் அவற்றின் காரணங்களும்!

பொ.பாலாஜிகணேஷ்

ம் வீட்டில் எல்லோருமே ஏதாவது ஒரு விதத்தில் தலைவலியால் பாதிக்கப்பட்டிருப்போம். ‘தலைவலி என்பது சாதாரண விஷயம்தான், அது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. ஒரு காபி குடித்தால் சரியாகி விடும். ஒரு டீ குடித்தால் சரியாகும்’ என்று நாம் நினைப்போம். அதையும் மீறி இருந்தால் தைலங்கள் தேய்த்தால் சரியாகிவிடும் என்று நினைப்போம். ஆனால், மேற்கண்டவற்றைக் கடந்த இந்த 6 வகையான தலைவலிகள் எதனால் ஏற்படுகிறது என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

1. மன உளைச்சல் தலைவலி: கழுத்தின் பின் தசைகளில்தான் இந்த வலி உருவாகும். இரவு உறக்கத்திற்குப் பிறகு தசைகள் இறுகி வலி ஆரம்பமாகும். ஒவ்வொரு முறை மன உளைச்சல் ஏற்படும்போதும் கழுத்தின் பின் தசையில் இறுக்கம் ஏற்பட்டு வலி ஆரம்பமாகும். இரண்டு பக்கமும் வலி வரலாம். தலையை இறுக்கமாகப் பிடித்தாற்போல் இருக்கும். நீண்ட காலமாக இருக்கும். 25லிருந்து 30 வயதில் இந்த வலி ஆரம்பிக்கும். ஆண்களை விட பெண்களுக்கே இந்த வலி அதிகம் வரும்.

2. சைனஸ் தலைவலி: மூக்கு அடைப்பு மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் இருக்கும். தலைவலி இருக்கும். மூக்கிலிருந்து நீர் வடியலாம். குனிய முடியாது. கண்களுக்கு மேலும் கீழும் வலி இருக்கும். முன் மண்டை முழுவதும் வலி பரவி வலிக்கும். கண்களுக்கு அடியில் இருக்கும் காற்றறைகளில் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி கடுமையாக இருக்கும்.

3. தமனிகள் தொடர்பான தலைவலி: மூளைக்கு குளுக்கோசும் ஆக்ஸிஜனும்தான் உணவு. இவை இரத்த நாளங்கள் (தமனி) வழியே மூளைக்குக் கிடைக்கின்றன. இவை செல்லும் பாதையில் ஏதேனும் தடை ஏற்பட்டால் மூளைக்குக் கிடைக்க வேண்டிய உணவு சரியாகக் கிடைக்காது. அப்போது மூளையின் இயக்கம் பாதிக்கப்படுகிறது. இந்தத் தமனிகளின் பாதையில் கொழுப்புக் கட்டிகள் அடைத்துக் கொள்வதால் இந்தக் குழாய் இறுகி, இரத்த ஒட்டம் சீராக இல்லாமல் தடைபட்டுப் போகலாம். அப்போது அதன் அறிகுறிகளாக கடுமையான தலைவலி ஏற்படுகிறது.

4. இரத்தக் கசிவால் ஏற்படும் தலைவலி: இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படும்போது அது அதிக அழுத்தம் காரணமாக வெடித்து இரத்தக் கசிவு ஏற்படலாம். அப்போது திடீரென அவருக்கு மண்டையைப் பிளப்பது போல தலைவலி ஏற்படும். இதுவே நீண்ட நேரத்திற்கு இரத்தக் கசிவு இருந்தால் மூளை வீங்கத் தொடங்கும்.

5. வளர்சிதை மாற்றத்தால் ஏற்படும் தலைவலி: சுவாசிக்கும் காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைவதால் தலைவலி ஏற்படும். அதோடு, துரையீரல் சம்பந்தமான பிரச்னைகள், இரத்த சோகை, இதயத் துடிப்பில் ஒழுங்கின்மை, தூக்கமின்மை போன்ற பிரச்னைகளும் வரலாம்.

6. தொற்றுகளினால் ஏற்படும் தலைவலி: எச்ஐவி கிருமிகள் தாக்கிய எய்ட்ஸ் நோயாளிகளுக்கு மூளையில் மெனிஞ்சைடிஸ் மற்றும் கட்டிகள் தாக்கத்தாலும் தலைவலி ஏற்படும். மூளையின் உள்ளே தொற்றுகளின் தாக்கத்தால் அழுத்தம் அதிகமாகிறது. அதனால் உள்ளே நாளங்கள் இழுக்கப்பட்டு தாங்கமுடியாத தலைவலி ஏற்படும். தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பக்கூடிய இந்த வலி தலையை முன்னோக்கி குனியும்போது அதிகரிக்கும்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT