Turmeric tea https://tamil.boldsky.com
ஆரோக்கியம்

உடல் நச்சுக்களை நீக்கி, ஆரோக்கியம் தரும் 7 பானங்கள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மட்டுமின்றி, உடலில் சேரும் அசுத்தங்களையும் நச்சுக்களையும் உடனுக்குடன் வெளியேற்றி நோய் வராமல் உடலைப் பாதுகாப்பது நம் கடமை. ஆரோக்கிய நன்மைகள் தந்து நச்சுக்களை வெளியேற்ற உதவும் 7 வகை பானங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மஞ்சள் சேர்த்து தயாரிக்கப்படும் டீயில் அநேக ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற ஆன்டி இன்ஃபிளமேட்டரி கூட்டுப் பொருளானது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேறச் செய்யும் என்ஸைம்களை ஊக்குவித்து சிறந்த முறையில் நச்சு முழுவதும் வெளியேற உதவும்.

கொதிக்கும் நீரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும், குர்குமின் உறிஞ்சப்பட ஒரு சிட்டிகை மிளகுத் தூள் சேர்த்து சிறிது நேரத்தில் இறக்கிவிட மஞ்சள் டீ ரெடி.

நெல்லிக்காயில் வைட்டமின் C சத்து மிக அதிகம் உள்ளது. நச்சுக்களை வெளியேற்றுவதில் இதன் பங்கு அளப்பரியது. இக்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் தீங்கு தரும் ஃபிரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சிதைவுற்ற செல்களை சீர்படுத்தி பாதுகாக்கவும் செய்யும். நெல்லிக்காய் ஜூஸ் தொடர்ந்து அருந்தி வந்தால் கல்லீரல் செயல்பாடுகள் மேம்படும்; உடலின் மொத்த ஆரோக்கியமும் காக்கப்படும்.

வெது வெதுப்பான நீரில் துருவிய இஞ்சி துண்டுகள் மற்றும் லெமன் ஜூஸ் சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்க, ஜீரணம் சிறப்பாக நடைபெற்று, உணவுக் கழிவுகள் தடங்கலின்றி வெளியேற இஞ்சி உதவும். லெமனில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலின் நச்சுக்களை வெளியேற்றும் செயலில் உதவி புரியவும், உடலிலுள்ள மொத்த அசுத்தங்களை நீக்கவும் செய்கின்றன.

க்ரீன் டீயில் கேட்டச்சின்ஸ் உள்ளிட்ட பல சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நச்சுக்களால் கல்லீரல் சேதமடைவதைத் தடுக்கவும், இயற்கையான முறையில் உடலிலிருந்து நச்சுக்கள் முழுவதுமாக  வெளியேறவும் உதவுகின்றன.

பாகற்காய் ஜூஸில் அநேக ஊட்டச்சத்துக்களும் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இவை கல்லீரலை நச்சுக்களின்றி சுத்தப்படுத்தவும், இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்தவும், ஜீரண மண்டல உறுப்புகளின் செயல்பாட்டை சிறப்பாக்கவும் உதவுகின்றன.

இளநீரில் எலக்ட்ரோலைட்கள் அதிகம். இவை இயற்கை முறையில் உடலை நீரேற்றத்துடன் வைக்கவும் நச்சுக்களை வெளியேற்றவும், கிட்னியின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உதவுகின்றன.

இதில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் சத்துக்களும் உள்ளன. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் லிவரிலுள்ள ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ்ஸை குறையச் செய்து நச்சுக்களை வெளியேற்றும் செயல் சிறப்படைய உதவுகின்றன.

ஒரு டீஸ்பூன் ஓமத்தை (Ajwain) இரவில் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க, அதிலுள்ள தைமோல் (Thymol) என்ற பொருள் ஆன்டி செப்ட்டிக்காக செயல்பட்டு கல்லீரல் ஆரோக்கியம் காக்க உதவுகிறது. ஓம வாட்டர் செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தவும், அங்குள்ள வீக்கங்களைக் குறைக்கவும், நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்றவும் உதவுகிறது.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT