7 signs that the pancreas is not working properly! 
ஆரோக்கியம்

கணையம் சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான 7 அறிகுறிகள்! 

கிரி கணபதி

கணையம் என்பது நம் உடலில் செரிமானம் மற்றும் ரத்த சர்க்கரை கட்டுப்பாடு ஆகிய இரண்டு முக்கிய செயல்பாடுகளில் ஈடுபட்டுள்ள ஒரு முக்கிய உறுப்பு. இது உற்பத்தி செய்யும் செரிமான நொதிகள் உணவை சிறுகுடலில் செரிக்க உதவுகின்றன. மேலும், இது இன்சுலின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்து ரத்தத்தில் சர்க்கரை அளவை சமநிலையை வைத்திருக்கிறது. கணையம் சரியாக செயல்படாத போது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். இந்தப் பதிவில் கணையம் சரியாக செயல்படாததற்கான 7 முக்கிய அறிகுறிகள் பற்றி விரிவாகக் காண்போம். 

கணையம் சரியாக வேலை செய்யவில்லை என்பதற்கான அறிகுறிகள்: 

  1. கணையம் சரியாக செயல்படாத போது வயிற்றில் மேல் பகுதியில் தீவிரமான வலி ஏற்படலாம். இந்த வலி முதுகுப்பகுதி வரை பரவலாம்.‌ சில சமயங்களில் உட்கார்ந்த நிலையில் அல்லது முன்னோக்கி வளைந்த நிலையில் இருக்கும் போது வலி அதிகமாக இருக்கும். 

  2. கணையம் சரியாக செயல்படாததால் வயிறு வீக்கம், குமட்டல் மற்றும் வாந்தியை ஏற்படுத்தும். இது பெரும்பாலும் வயிற்று வலியுடன் தொடர்புடையதாக இருக்கும். 

  3. கணையம் சரியாக செயல்படாமல் போனால், உடல், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை சரியாக உறிஞ்சிக் கொள்ள முடியாமல் போகலாம். இதனால், எதிர்பாராத எடை இழப்பு ஏற்படக்கூடும். 

  4. கணையம் உற்பத்தி செய்யும் செரிமான நொதிகள் குறைவாக இருப்பதால், கொழுப்பு நிறைந்த மலம், லேசான மிதக்கும் மலம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். 

  5. கணையத்தில் ஏற்படும் வீக்கம், பித்த நீரின் ஓட்டத்தைத் தடுத்து மஞ்சள் காமாலையை உண்டாக்கும். இதனால், சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். 

  6. கணையம் இன்சுலின் உற்பத்தியை குறைப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய் ஏற்படலாம்.

  7. ரத்தத்த சர்க்கரை நீரின் அளவு அதிகரிப்பதால் தொடர்ச்சியான தாகம் மற்றும் சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உண்டாக்கலாம். 

கணைய பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்: 

அதிக அளவில் மது அருந்துவது கணையத்தை சேதப்படுத்தும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். பித்தநீர் கற்கள் கணையத்தின் குழாயை அடைத்து கணைய அழற்சியை ஏற்படுத்தும். ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகமாக இருப்பதும் கணையத்தை பாதிக்கக்கூடும். 

சில மருந்துகள் கணையத்தை பாதிக்கும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும். கணைய புற்றுநோய் கணையத்தின் செயல்பாட்டை பாதிக்கக்கூடும். சில நபர்களுக்கு கணையம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மரபணு ரீதியாக இருக்கலாம். 

மேற்கூறிய அறிகுறிகள் ஏதேனும் உங்களுக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம். மருத்துவர் உங்களுக்கு ரத்த பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், சிடி ஸ்கேன் போன்ற சோதனைகளை செய்து, அதன் உண்மை நிலையைக் கண்டறிவார். இதற்கான சிகிச்சை முறைகள் கணையம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் குறித்து மாறுபடும். மருந்துகள், ஊட்டச்சத்து சிகிச்சை, அறுவை சிகிச்சை போன்றவை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படலாம். 

சுவையான மஞ்சள் பூசணி ப்ரை-வேர்க்கடலை ஸ்வீட் ரெசிபிஸ்!

மறுபிறவி எடுத்ததுபோல உணர்கிறேன் – வருண் சக்கரவர்த்தி உருக்கம்!

15 கடவுளுக்கான பிரத்யேக காயத்ரி மந்திரம்!

தண்டுக்கீரையின் தரமான மருத்துவப் பலன்கள்!

காய்கறிகள் கலவை வெஜிடபிள் கூட்டு வகைகள்!

SCROLL FOR NEXT