8 Foods That Play a Major Role in Relieving Thyroid Problems https://www.narayanahealth.org
ஆரோக்கியம்

தைராய்டு பிரச்னைக்கு நிவாரணம் தருவதில் முக்கியப் பங்காற்றும் 8 உணவுகள்!

பொ.பாலாஜிகணேஷ்

ரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பது நாம் சாப்பிடும் உணவுதான். உணவு ஆரோக்கியமாக இருந்தால், சத்தாக இருந்தால் நம்மை எந்தவிதமான கொடிய நோய்களும் அண்டாது. தைராய்டு பிரச்னைக்கு என்ன இயற்கை உணவு சாப்பிடலாம் என்ற சந்தேகம் நம்மில் பலருக்கு உள்ளது. கீழ்க்கண்ட இந்த 8 உணவுகளை சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் மட்டுமல்ல, நம்மை விட்டு தைராய்டு என்ற நோயும் ஓடிப் போய்விடும்.

1. ஸ்ட்ராபெர்ரி: உடலில் போதிய அயோடின் இல்லாவிட்டால், தைராய்டு சுரப்பியினால் எதையும் சரியாக செய்ய முடியாது. எனவே ஸ்ட்ராபெர்ரியை அதிகம் சாப்பிட்டால், தைராய்டில் (Thyroid Problem) இருந்து குணமாகலாம். ஏனெனில் அதில் அயோடின் அதிக அளவில் உள்ளது. எனவே தைராய்டு குணமாக நினைப்பவர்கள் ஸ்ட்ராபெர்ரி பழத்தை அதிகளவு உண்டு வந்தால் கட்டாயம் தைராய்டு பிரச்னை (thyroid treatment) சரியாகிவிடும்.

2. காளான்: செலினியம் குறைபாடும் தைராய்டு ஏற்படுவதற்கு ஒரு முக்கியக் காரணம். எனவே செலினியம் அதிகம் உள்ள காளானை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். காளானை அதிகளவு உண்டுவர தைராய்டு பிரச்னை (Thyroid Problem) சரியாகிவிடும்.

3. பூண்டு: செலினியம் அதிகம் உள்ள உணவுகளில் பூண்டும் ஒன்று. இந்த பூண்டு தைராய்டு உள்ளவர்களுக்கு மட்டுமின்றி, நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகளுக்கும் சிறந்தது. தைராய்டு குணமாக பூண்டை அதிகளவு உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது.

4. பசலைக் கீரை: பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின், புரோட்டீன், கனிமங்கள் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. எனவே அவற்றில் ஒன்றான பசலைக் கீரையை அதிகம் சாப்பிட்டால், தைராய்டு குணமாக்கும் சிறந்த ஒன்றாக விளங்குகிறது.

5. முட்டை: முட்டை மற்றும் பால் பொருட்கள் தைராய்டு சுரப்பிக்கு மிகவும் ஆரோக்கியமானது. இத்தகைய உணவுகளில் கால்சியம் மட்டுமின்றி, அதிகப்படியான அளவில் இரும்புச்சத்து மற்றும் அயோடின் உள்ளது.

6. தானியங்கள்: தானியங்களில் ப்ரௌன் அரிசி, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றில் வைட்டமின் பி மற்றும் ஊட்டச்சத்துக்கள் பல உள்ளன. இந்த சத்துக்களை அதிகம் சேர்த்தால், அவை உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.இதனால் தைராய்டு சுரப்பி சீராக இயங்கி உடலுக்குத் தேவையான தைராய்டு ஹார்மோனை சுரக்கும்.

7. புரோக்கோலி: இந்த காய்கறியை தினமும் சாப்பிட்டால், தைராய்டு சுரப்பியில் ஏற்படும் பாதிப்பை தடுக்கலாம். இதனால் தைராய்டு சுரப்பியானது சீராக இயங்கும்.

8. தக்காளி: தக்காளியில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. முக்கியமாக இந்த உணவை தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சேர்த்துக்கொள்ள  வேண்டாம்.

குழந்தைகளுக்கு அதிகமாக பவுடர் பூசுகிறீர்களா? தாய்மார்களே உஷார்!

மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT