வலிமையான பெண்
வலிமையான பெண் 
ஆரோக்கியம்

பெண்கள் வலுவான தசை பெற உட்கொள்ள வேண்டிய 8 உணவுகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ற்கால இளம் பெண்கள் அலுவலகத்திலும் வீட்டிலும் பல தரப்பட்ட வேலைகளைச் செய்ய வேண்டியது அத்தியாவசியமாகிறது. அதற்கு அவர்கள் ஆரோக்கியமான மனநிலையும் உடலமைப்பும் கொண்டிருப்பது அடிப்படைத் தேவையாகிறது. உடல் ஆரோக்கியத்திற்கு வலுவான தசைகள் பெற்றிருப்பது மிகவும் முக்கியம். அதற்கு அவர்கள் உட்கொள்ள வேண்டிய 8 வகை உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்தப் பதிவில் காணலாம்.

* அதிகளவு புரோட்டீன் மற்றும் குறைவான கொழுப்புச் சத்து  உள்ள சிக்கன் பிரெஸ்ட் (Breast) உண்பது தசைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.

* அதிகளவு புரோட்டீன், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் B வைட்டமின்கள் நிறைந்த உணவு சால்மன் மீன். இது வலுவிழந்த தசைகளின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் உடலின் மொத்த ஆரோக்கியத்திற்கும் உதவும்.

* முட்டையில் நன்மை தரும் கொழுப்பு, தரமான புரோட்டீன், உடலுக்கு மிகத் தேவையான வைட்டமின் B12, மினரல்கள் போன்றவற்றுடன் சிதைவுற்ற தசைகளின் சீரமைப்புக்கும் தசை வளர்ச்சிக்கு உதவும் ச்சோலைன் என்ற வைட்டமினும் அதிகம் உள்ளது.

* கசீன் (Casein) என்ற ஒரு வகைப் புரோட்டீன் கிரீக் யோகர்டில் அதிகம் உள்ளது. இது மிகவும் மெதுவாக ஜீரணிக்கப்பட்டு தொடர்ந்து அமினோ அமிலங்களை தசைகளுக்கு வழங்கக் கூடியது.

* கொண்டைக் கடலை உடலுக்கு சக்தி அளிக்கத் தேவையான கார்போஹைட்ரேட்களையும் தசைப் பராமரிப்பிற்குத் தேவையான புரோட்டீன்களையும் அதிகம் கொண்டுள்ள உணவு.

* குயினோவா தானியத்தில் உடலுக்குத் தேவையான ஒன்பது வகையான அமினோ அமிலங்களும் அடங்கியுள்ளன. மேலும் இதில் அதிகளவு நார்ச்சத்து, மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்தும் உள்ளன. இவை அனைத்தும் தசைகளின் சிறப்பான கட்டமைப்பிற்கும் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவி புரிபவை.

* பாதாம் பருப்பில் அதிகளவு புரோட்டீன், நல்ல கொழுப்புகள் மற்றும் வைட்டமின் E ஆகியவையும் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் சிதைவுற்ற தசைகளை சீராக்கவும் உடலின் மொத்த ஆரோக்கியதிற்கும் உதவுகின்றன.

* பசலைக் கீரையில் அதிகளவு வைட்டமின் A, C, K, இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து உள்ளன. இவை தசைகளின் மேம்பட்ட இயக்கத்திற்கும் மொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றன.

மேலே கூறிய உணவுகளை பெண்கள் அடிக்கடி உட்கொண்டு ஆரோக்கியமும் அழகும் பெறலாம்.

ஆன்மீகக் கவிதை - தமிழ் வளர்த்த சமயக் குரவர்!

அதிக மனக்கவலையின் பரிசு உடல் பருமன்; எப்படித் தெரியுமா?

The Color Code: A Child’s Perspective on Pink and Blue!

குடும்பத்தின் மகிழ்ச்சியில் பெண்களின் அளப்பரிய பங்கு!

‘A Silent Voice’ – that talks about friendship and forgiveness!

SCROLL FOR NEXT