Benefits of curry leaves water on an empty stomach 
ஆரோக்கியம்

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நீர் செய்யும் 9  விஷயங்கள்!

ம.வசந்தி

றிவேப்பிலை நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் சக்தி வாய்ந்த ஒரு மூலிகையாகும். அந்த வகையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நீர் அருந்தும்போது உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த விஷயங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. செரிமானத்தை மேம்படுத்தும்: கறிவேப்பிலை நீரை காலையில் குடிப்பதால் வயிற்றுக்குள் சத்து சீராக பரவுவதால், செரிமான பிரச்னைகள் சுலபமாகக் குணமாகி, மலச்சிக்கலை குறைத்து வயிற்றுப் புண்ணை தீர்க்கிறது.

2. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்: கறிவேப்பிலை கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து  இதயத்திற்கு ஆரோக்கியத்தை வழங்கி, இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் என்பதால் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை நீரை தினமும் குடிப்பது சிறந்தது.

3. சருமத்தை சுத்தமாக்கும்: கறிவேப்பிலை நீரில் உள்ள நிறைந்த ஆன்டி ஆக்சிடெண்ட் (anti-oxidant) தன்மை, சருமத்தில் உள்ள பருக்கள், மருக்குகள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்ற உதவி  முகத்தில் இளமையைக் கொண்டுவந்து, பொலிவான தோற்றத்தை வழங்குகிறது.

4. எடை குறைக்க உதவும்: கறிவேப்பிலை நீரில் வளர்சிதை மாற்றத்தை (metabolism) அதிகரிக்கும் தன்மை உள்ளதால் இதைக் குடிக்கும்போது உடல் கொழுப்பு எளிதில் கரைந்து, நீண்ட காலம் எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.

5. நீரிழிவு நோயாளிகளுக்கு உதவிடும்: கறிவேப்பிலை நீர்  இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதால்  இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தி, நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக நிர்ணயிக்க உதவுகிறது.

6. முடி வளர்ச்சியை மேம்படுத்தும்: கறிவேப்பிலையின் இரும்பு சத்து, முடி வேர்களை வலுப்படுத்தும் திறன் கொண்டதால், முடி உதிர்வைத் தடுத்து புதிதாக வலுவான முடி வளர்ச்சியை தூண்டி, முடி உதிர்வு குறைந்து, பளபளப்பான, நீளமான, கருமையான முடியை பெற உதவும்.

7. வயிற்றுப் புண்களை குணப்படுத்தும்: கறிவேப்பிலை நீரின் ஆற்றல், வயிற்றுப் புண்கள் மற்றும் பலவிதமான வயிற்றுப் பிரச்னைகளை நிவர்த்தி செய்து நல்ல செரிமான ஆரோக்கியத்தை வழங்கும்.

8. நரையைக் கட்டுப்படுத்தும்: கறிவேப்பிலை நீரில் உள்ள சத்துக்கள், முடியின் நரை அதிகரிப்பை தடுக்கவும், இயற்கையான முடி நிறத்தை பாதுகாக்கவும் உதவுகின்றன.

9. பாக்டீரியாவை எதிர்க்கும்: கறிவேப்பிலையின் நச்சு நீக்க சக்தி, உடலில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றி, சரும நோய்களைக்குணமாக்கி சருமத்தை சுத்தமாக்குகிறது.

கறிவேப்பிலை நீரை எப்படித் தயாரிப்பது?: கொஞ்சம் கறிவேப்பிலை இலைகளை எடுத்து சுத்தமாக கழுவி, ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதித்து, பாதியாக ஆவியாகும் வரை விட்டு வைக்கவும். பிறகு அதை வடிகட்டி, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்தலாம்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT