நாம் உண்ணும் உணவுகள் நமது இரத்தத்தின் பிஹெச் சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ph அளவுகோல் என்பது ஒரு பொருள், எவ்வளவு அமிலம் அல்லது காரமானது என்பதை தீர்மானிக்கும் ஒரு வழி. அல்கலைன் உணவுகளை உண்ணும்போது அது உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கிறது. நாம் உண்ண வேண்டிய 9 சிறந்த அல்கலைன் உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
அல்கலைன் நிறைந்த பத்து உணவு வகைகள்:
1. பச்சை இலை காய்கறிகள்: பச்சை இலை காய்கறிகளில் அதிக காரத்தன்மை உள்ளது. இது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடியது. முட்டைக்கோஸ், கீரை, அருகம்புல், கடுகு, கீரை போன்றவற்றில் அல்கலைன் அதிகம் உள்ளது.
2. அவகோடா: இதில் வைட்டமின் இ, கே, சி, மெக்னீசியம் மற்றும் ஃபோலேட் சத்துக்கள் உள்ளன. நமது செல்கள் வளரவும் சரியாக செயல்படவும் இவை உதவுவதோடு, மன அழுத்தத்திற்கும் நல்ல மருந்தாக விளங்குகிறது.
3. டோஃபு: இது சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படுவதால் இதில் இயற்கையாகவே காரத்தன்மை உள்ள பிஹெச் உள்ளது. புரதம் மற்றும் இரும்புச் சத்துக்கான நல்ல மூலமாக இது உள்ளது. வயதானவுடன் ஏற்படும் நினைவாற்றல், கோளாறு இருதய நோய் போன்றவற்றுக்கு நல்ல தீர்வாக இது இருக்கும்.
4. பருவ கால பழங்கள்: அன்னாசி, திராட்சை, தர்ப்பூசணி, ஆப்பிரிக்காட், ஆப்பிள், கிவி, மாம்பழம், ஆரஞ்சு, கொடி முந்திரி போன்ற பழங்களில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
5. புரோக்கோலி: முழுமையான ஊட்டச்சத்து உள்ள இந்த காய்கறி செரிமானத்திற்கு நல்லது. அதிக நார்ச்சத்து உள்ளதால் உடல் எடை கூடாமல் வைக்கிறது.
6. சர்க்கரைவள்ளி கிழங்கு: இனிப்பு உருளைக்கிழங்கு என அழைக்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு லேசான அமில மற்றும் கார பிஹெச் சமநிலையை கொண்டுள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.
7. காலிஃப்ளவர்: இதில் அல்கலைன் பிஹெச் உள்ளது. எனவே, உடலில் உள்ள பிஹெச் சமன் செய்யும். புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. உடலில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது.
8. வெள்ளரிக்காய்: இது செரிமான மேம்பாட்டிற்கு உதவுகிறது. நல்ல ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. வைட்டமின் கே, சி மற்றும் பி வைட்டமின்கள் ஏராளமாக உள்ளன. மேலும் பொட்டாசியம், மாங்கனிஸ், பாஸ்பரஸ், மெக்னீசியம், அமினோ அமிலங்கள், கார்போஹைட்ரேட், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து உள்ளது. இதில் கலோரிகள் குறைவு. ஆக்ஸிஜனேற்ற விளைவுகளையும் கொண்டுள்ளது. இதய நோய் உருவாகும் அபாயத்தை குறைக்கிறது. இரத்த சர்க்கரையை குறைக்கிறது. புற்றுநோயை எதிர்த்து போராடுகிறது. உடலை நீரேற்றமாக வைக்கிறது.
9. மற்ற கார உணவுகள்: சிட்ரஸ் பழங்கள், கொட்டைகள், வாழை, எலுமிச்சை, கடற்பாசி மற்றும் கடல் உப்பு. மாங்கனி, பேரிக்காய், தக்காளி, வேர் காய்கறிகள், பாதாமி பழம், வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி அவுரிநெல்லிகள், கத்திரிக்காய், பச்சை பீன்ஸ், ராஸ்பெர்ரி, பீச் பழங்கள்.
அல்கலைன் உணவின் நன்மைகள்: பொதுவாக, மனித உடல் காரத் தன்மையுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளதால் அதிகமான கார உணர்வு உணவுகளையும் குறைவான அமில உணவுகளையும் உட்கொள்வது நல்லது.
1.எலும்பு ஆரோக்கியம்: எலும்புருக்கி நோயான ஆஸ்டியோபோரோசிஸ்ஸின் அபாயத்தைக் குறைக்கிறது.
2. புற்றுநோயை தடுக்கிறது: குறைந்த இறைச்சி மற்றும் அதிக அல்கலைன் உணவுகளை உண்ணுவதால் மார்பக புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
3. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கிறது. பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
4. சிறுநீரக ஆரோக்கியம்: நீண்ட கால சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அல்கலைன் உணவுகள் சிறந்த மாற்றாக அமையும்.