விளையாட்டுகள் அல்லது வழக்கமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது உங்கள் உடல்நலம் மற்றும் நல்வாழ்வைப் பராமரிக்க மிகவும் முக்கியமாக இருக்கிறது. குறிப்பாக 40-50 வயதுடைய நபர்கள் கட்டாயம் ஈடுபட வேண்டிய சில சிறந்த விளையாட்டுகளையும் அதனால் நீங்கள் பெறப்போகும் ஆரோக்கிய நன்மைகளையும் பற்றி தெரிந்துகொள்வோம்.
நடைப்பயிற்சி அல்லது நடைப் பயணம்:
நடைப்பயிற்சி அல்லது நடைப் பயணம் ஆகியவை உங்கள் உடலுக்குக் குறைந்த தாக்கங்களைத் தரக்கூடிய சிறந்த பயிற்சிகளாகும். இவற்றைத் தங்களுக்கான தினசரி நடைமுறைகளில் யாராவேனாலும் இணைத்துக்கொள்ளலாம். காரணம் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, தசை சகிப்புத்தன்மையை(enhance muscle endurance) அதிகரிக்கின்றது. பாதுகாப்பான எடையைப் பராமரிக்க உதவுகின்றது. மேலும், மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனத் தெளிவை மேம்படுத்தவும் உதவுகின்றது, இறுதியாக, ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு இவை சரியான செயல்முறையாக இருக்கின்றது.
நீச்சல்:
நீச்சல் பயிற்சி நம் மூட்டுகளைப் பிரச்னை இல்லாமல் வைத்துக்கொள்ளும் ஒரு நல்ல உடல் பயிற்சியாகும், இது கீல்வாதம்(arthritis) அல்லது பிற மூட்டு பிரச்னைகள் உள்ளவர்களுக்கு ஏற்றதாக அமைகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, தசைகளைப் பலப்படுத்துகிறது, உடல் உடல் நெகிழ்வுத்தன்மையையும் (flexibility), நுரையீரல்(lungs) திறனையும் அதிகரிக்கிறது. பொதுவாக நீரில் மிதந்துகொண்டிருக்கும்போது அதன் மிதக்கும் தன்மை உங்கள் உடல் வலிகளை மறந்து சற்று உங்களை ரிலாக்ஸ் ஆக வைத்திருக்கும்.
யோகா மற்றும் தை சி(Tai Chi- சீனாவின் ஒருவகையான எக்ஸர்சைஸ்):
யோகா மற்றும் தை சி(Tai Chi - சீனாவின் ஒருவகையான எக்ஸர்சைஸ்) ஆகியவை ஒருவரின் நெகிழ்வுத்தன்மை(flexibility), சமநிலை மற்றும் நினைவாற்றல் ஆகியவற்றில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்தப் பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைக்கவும், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் நெகிழ்வுத்தன்மையை(flexibility) அதிகரிக்கவும், மைய தசைகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன. இதை உங்கள் வழக்கமான பயிற்சியாக மேற்கொள்ளும்போது கீல்வாதம்(arthritis), முதுகுவலி மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நிலைகளின் அறிகுறிகளை முன்கூட்டியே குணப்படுத்த முடியும்.
சைக்கிள் ஓட்டுதல்:
மூட்டுகளை வலிமையாக வைத்துக்கொள்ளவும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் சைக்கிள் ஓட்டுதல் ஒரு சிறந்த வழியாகும். இது கால் தசைகளைப் பலப்படுத்துகிறது. பலப்படுத்துவதுடன் நம் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பை(coordination) மேம்படுத்துகிறது. எடையை நிர்வகிக்கவும் இது உதவுகிறது. சைக்கிள் ஓட்டுதல் உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, மனநிலையை மேம்படுத்துவதன் மூலம் நம் முழு செயல்பாடுகளையும் மேம்படுத்துகிறது.
டென்னிஸ் மற்றும் பூப்பந்து:
டென்னிஸ் மற்றும் பேட்மிண்டன் போன்ற விளையாட்டுகள் aerobic மற்றும் anaerobic உடற்பயிற்சியின் கலவையை வழங்குகின்றன. அவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, கை-கண் ஒருங்கிணைப்பை மேம்படுத்துகின்றன. மற்றும் தசை வலிமையை மேம்படுத்துகின்றன. பின் இந்த விளையாட்டுகள் வயது முதிர்வால் ஏற்படும் எலும்பு அடர்த்தியையும்(bone density) பராமரிக்க உதவுகின்றன.
ஒட்டுமொத்தமாக இதனால் நாம் வாழ்நாள் முழுவதும் தக்கவைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?
இதய ஆரோக்கியம்: வழக்கமான உடல் செயல்பாடு இதயச் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும் இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கிறது.
எடை பராமரிப்பு: நிலையான உடற்பயிற்சி ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது, இதன்மூலம் நீரிழிவு போன்ற உடல் பருமன் தொடர்பான பிரச்னைகளால் வரும் இணை நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
மன ஆரோக்கியம்: உடல் செயல்பாடுகள் எண்டோர்பின்களை(endorphins) வெளியிடுகின்றன, இது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அறிகுறிகளைப் போக்க உதவுகிறது, இதன் மூலம் சிறந்த மன ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.
எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியம்: மேலே குறிப்பிட்ட பல செயல்பாடுகளை நாம் கட்டாயம் மேற்கொள்ளும்போது, ஆஸ்டியோபோரோசிஸ்(osteoporosis) மற்றும் மூட்டுவலி அபாயத்தை தள்ளிப்போடவோ அல்லது முற்றிலும் தடுக்கவோ முடியும்.