கறிவேப்பிலை 
ஆரோக்கியம்

கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

ம.வசந்தி

மையலுக்கு மணமும் ருசியும் ஒரு உணவுப் பொருள் கறிவேப்பிலை. இதை தினமும் சமையலில் தாளிக்க மட்டும்தான் நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். அதிலும் உணவு சாப்பிடும்போது அதை எடுத்துப் போட்டுவிட்டு சாப்பிடுபவர்கள்தான் அதிகம். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிகமாக நிறைந்துள்ளன. இத்தகைய கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

கொழுப்பு கரையும்: காலையில் வெறும் வயிற்றில் சில கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்பு கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

இரத்த சோகை: இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

சர்க்கரை நோய்: சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

இதய நோய்: கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்னைகளில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

செரிமானம்: நீண்ட நாட்கள் செரிமான பிரச்னையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்னைகள் நீங்கிவிடும்.

முடி வளர்ச்சி: கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளி தேக்கம்: சளி தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருக்கும் சளி முறிந்து முற்றிலும் வெளியேறிவிடும்.

கல்லீரல் பாதிப்பு நீங்கும்: பச்சையாக கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும்.

இத்தனை சிறப்புமிக்க கறிவேப்பிலையை தினமும் உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT