Banana peel that cures diseases. 
ஆரோக்கியம்

நோய்களைப் போக்கும் வாழைப்பழத் தோல். 

கிரி கணபதி

வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் வாழைப்பழம் சாப்பிட்டு தூக்கி வீசும் அதன் தோலில் ஏராளமான நன்மைகள் உள்ளது என்பது பலருக்குத் தெரியாது. 

வாழைப்பழத்தில் தாதுக்கள், நார்சத்துக்கள், விட்டமின்கள், பொட்டாசியம் என பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அதேபோல வாழைப்பழம் சாப்பிட்டு நாம் வேண்டாம் என வீசும் தோலிலும் சத்துக்கள் உள்ளது. வாழைப்பழம் அளவுக்கு அதன் தோலும் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். 

வாழைப்பழத் தோலில் பாலிபினால்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் அடங்கியுள்ளது. இவை நமது உடலில் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்ற உதவும். இதில் அழற்ச்சி எதிர்ப்பு பண்பும் உள்ளதால் தோலில் ஏற்படும் அரிப்பு, தடிமன் போன்றவற்றை சரி செய்யும். குறிப்பாக சோரியாசிஸ் எனப்படும் நாள்பட்ட தோல் நோய்க்கு சிறந்த மருந்தாக வாழைப்பழ தோல் அமைகிறது. சோரியாசிஸ் உள்ள இடத்தில் வாழைப்பழத் தோலை தேய்ப்பது மூலமாக அந்த இடத்திற்கு குளிர்ச்சியும் ஈரப்பதமும் கிடைக்கிறது. 

வாழைப்பழத்தில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளதால் மீண்டும் சொரியாசிஸ் வராமல் தடுக்கலாம். வாழைப்பழத் தோலில் உள்ள கலவைகள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும் என ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகிறது. 

வாழைப்பழ தோலை சருமத்திற்கு பயன்படுத்தும்போது முகம் பொலிவு பெற உதவுகிறது. வாழைப்பழ தோலை உரித்து அதை அப்படியே முகத்தில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 15 நிமிடங்கள் காய விட்டு பிறகு சாதாரண நீர் கொண்டு சருமத்தை கழுவினால் முகம் பளபளவென மாறிவிடும். இதை பயன்படுத்துவதால் எவ்விதமான பக்க விளைவுகளும் ஏற்படாது.

எனவே இனி வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு, அதன் தோலை குப்பையில் போட்டு வீணடிக்காதீர்கள். உங்கள் சருமத்தை பொலிவாக மாற்றவும், தோல் நோய்களை குணப்படுத்தும் இவற்றை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT