ரோஜா இதழ், கற்கண்டு, தேன் சேர்த்து செய்யப்படுவதுதான் குல்கந்து. இதனுடைய இனிப்பு சுவையும், ரோஜாவின் நறுமணமும் அனைவரையும் சுண்டியிழுக்கச் செய்யும். குல்கந்தை தினமும் ஒரு தேக்கரண்டி எடுத்துக் கொள்வதால், உடலுக்குக் கிடைக்கும் ஆரோக்கிய பலன்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தூக்கம் வராமல் கஷ்டப்படுபவர்கள் தினமும் பாலில் இதை ஒரு தேக்கரண்டி சேர்த்து குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்னை நீங்கும். குல்கந்தை வாய்புண், பல் வலி, வாய் எரிச்சல் உள்ளவர்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அல்சர் பிரச்னை இருப்பவர்கள் குல்கந்து சாப்பிடுவதால் சீக்கிரமே அல்சர் குணமாகும்.
சிலருக்கு அதிகமாக வியர்க்கும். அவர்கள் தினமும் குல்கந்து சாப்பிட்டு வந்தால், வியர்வையால் ஏற்படும் பிரச்னைகள் எல்லாம் சீக்கிரமே குணமாகும். இதை சாப்பிடுவதால் உடலை குளிர வைக்கிறது. நிறைய பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வயிற்றில் வலி ஏற்படும். அவர்கள் குல்கந்தை சாப்பிட்டு வரலாம். கர்ப்பப்பை தொற்று, வெள்ளைப்படுதல், உடல் பித்தம், வயிற்றுக் கோளாறு ஆகியவை குல்கந்து சாப்பிட சரியாகும்.
அசிடிட்டி, நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் குல்கந்து சாப்பிட்டு வர வயிற்றில் ஏற்படும் எரிச்சலான உணர்வு குணமாகும். இதில் அதிகமாக நார்ச்சத்து உள்ளதால், வயிற்றுப்போக்கை சரிசெய்யும். மூச்சு சம்பந்தமான பிரச்னை, தொண்டை எரிச்சல், இருமல் போன்றவற்றையும் இது போக்குகிறது. இதில் தேன் இருப்பதால், வறட்டு இருமலையும் கட்டுப்படுத்துகிறது.
உடலில் உள்ள கழிவுகளை நீக்குவதற்கு குல்கந்து பெரிதும் உதவுகிறது. கல்லீரலை தூண்டிவிட்டு உடலில் உள்ள வேண்டாத கழிவுகளை நீக்குகிறது. இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால், செரிமான பிரச்னைகளை நீக்கி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது.
குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால், சருமத்தில் உள்ள கொலாஜென் அதிகரித்து சருமம் பளபளப்பாகும். இதயத்தில் இருக்கும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இதயத்தை பாதுகாக்கிறது. கீழ்வாதம், எலும்பில் ஏற்படும் வலி, வீக்கம், தலைவலி போன்றவற்றை குணமாக்க உதவுகிறது.
ஆண்கள் இதை தொடர்ந்து சாப்பிட்டு வர ஆண்மை பலம் கூடும். உடலில் இரத்தம் குறைவாக 'அனிமியா' போன்ற நோய் இருந்தால், குல்கந்தை தொடர்ந்து எடுத்துக் கொள்வதின் மூலம் இரத்த விருத்தியாகும். இரவு தூங்கச் செல்லும் முன்பு பாலில் ஒரு தேக்கரண்டி குல்கந்தை சேர்த்து குடித்து வர நல்ல பலனைத் தரும்.