விளாம்பழத்தை ஆங்கிலத்தில் உட் ஆப்பில் என அழைப்பார்கள். இந்தியாதான் இதன் தாயகம். அதன் பிறகு தான் இலங்கை, தைவான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் பரவலாக விளைவிக்கப்பட்டது. காடுகளில் அதிகம் காணப்படும் இம்மரம் தோட்டங்களிலும், கோயில்களிலும் கூட வளர்க்கப்படும். காயாக இருக்கும்போது துவர்ப்பு சுவையிலும், பழுத்த பின் புளிப்பு துவர்ப்பு இரண்டும் கலந்த சுவைகளும் இருக்கும். கடினமாக இருக்கும் விளாம்பழத்தின் ஓடுகளைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்கள் செய்வார்கள். இது தவிர இதில் ஏராளமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது.
விளாம்பழத்தில் உடலுக்குத் தேவையான விட்டமின் ஏ, விட்டமின் பி2 மற்றும் சுண்ணாம்புசத்து அதிகம் இருப்பதால் எலும்பு மற்றும் பல் பலமடைய உதவுகிறது. மேலும் விளாமரத்தின் பிசினை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு போன்ற பிரச்சனைகள் குணமடையும்.
வாய்ப்புண் உள்ளவர்கள் விளாங்காயை தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் சரியாகும். அத்துடன் அல்சர் பாதிப்புகளும் குறையும். விலங்காயை நன்கு அரைத்து மோரில் கலந்து குடித்தால் பேதி குணமாகும்.
விளாமரத்தின் பட்டையை பொடியாக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து கசாயம் போல குடித்தால், மூச்சுத் திணறல் வறட்டு இருமல் போன்றவை குணமாகும். பிரசவித்த பெண்களுக்கு உடல் உறுப்புகளுக்கு இது அதிக ஆற்றலைக் கொடுக்கும்.
விளாம்பழ பிசினை உலர்த்தி, தூள் செய்து, காலை மாலை என ஒரு சிட்டிகை வெண்ணெயுடன் கலந்து சாப்பிட்டால், உள்ளுறுப்பு ரணம், நீர் எரிச்சல், வயிற்றுப்போக்கு, மாதவிடாய் பிரச்சனைகள் எல்லாம் குணமாகும்.
பித்தம் சம்பந்தமான பாதிப்பு உள்ளவர்கள் விளாம்பழத்துடன் வெள்ளம் சேர்த்து ஒரு மாதம் வரை சாப்பிட்டு வந்தால் எல்லாம் சரியாகும். இதனால் பித்தாத்தால் ஏற்படும் கண்பார்வை மங்கல், தலைவலி, வாயில் கசப்பு, அதிக வியர்வை, நாவில் ருசியற்ற உணர்வு போன்றவை குணமாகும்.
விளாமரத்தின் கொழுந்து இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகினால், வாயுத்தொல்லை நீங்கும். பித்தத்தை போக்குவதற்கும் இதன் இலைகளைப் பயன்படுத்தலாம்.
குறிப்பாக, குழந்தைகளுக்கு தினசரி விளாம்பழம் கொடுத்து வந்தால் அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது
இப்படி எண்ணிலடங்காத பல ஆரோக்கிய நன்மைகள் விளாம்பழத்தில் நிறைந்துள்ளது. எனவே இதை அனைவரும் கட்டாயம் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனால் நோய் நொடியின்றி ஆரோக்கியமான வாழ்க்கையை உங்களால் வாழ முடியும்.