சிவப்பு நிற ராஸ்பெர்ரியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் அதிகம் உள்ளன. நீரிழிவு நோயாளிகள் இதை தாராளமாக உண்ணலாம். ராஸ்பெர்ரியின் ஏழு பயன்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. நார்ச்சத்து: ராஸ்பெர்ரியில் நார்ச்சத்து நிறைந்து இருக்கிறது. இது செரிமானத்திற்கு உதவுகிறது. குடல் செயல்பாட்டை நன்றாகப் பராமரிக்க உதவுகிறது.
2. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள்: ராஸ்பெர்ரியில் வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை நிறைந்துள்ளன. வைட்டமின் சி நோய் எதிர்ப்பு செயல்பாடு மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. வைட்டமின் கே இரத்தம் உறைதல் மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு வழி வகுக்கிறது. மாங்கனீசு வளர்சிதை மாற்றம் மற்றும் எலும்பு உருவாக்கம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. மேலும், பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
3. ஆன்டி ஆக்ஸிடென்ட்கள்: ராஸ்பெர்ரிகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் எலாஜிக் அமிலம் உள்ளிட்ட ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இந்தக் கலவைகள் ஃப்ரீரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன. இதய நோயைத் தடுக்கிறது. புற்றுநோயை உண்டாக்கும் செல்களை அழிக்கிறது. மேலும் வயதாவதை தடுத்து இளமையாக வைக்கிறது.
4. எடை மேலாண்மை: இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்து இருப்பதோடு. குறைந்த கலோரி எண்ணிக்கை இருக்கிறது. அதனால் உடல் எடையை நிர்வகிக்க விரும்புவர்களுக்கு இது ஒரு சிறந்த சாய்ஸ். திருப்திகரமான மற்றும் சத்தான சிற்றுண்டியாக இது அமையும். இதை உண்ட நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. அதனால் தேவையில்லாமல் பிற உணவுகளை உண்ணாமல் உடல் எடையும் கூடாது.
5. அழற்சி எதிர்ப்புப் பண்புகள்: சில ஆய்வுகள் ராஸ்பெர்ரியில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டிருக்கலாம் என்று கூறுகின்றன. இது இதய நோய் மற்றும் கீல்வாதம் போன்ற அழற்சியுடன் தொடர்புடைய நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.
6. இதய ஆரோக்கியம்: ராஸ்பெர்ரியில் உள்ள நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் கலவையானது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும், இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் மற்றும் இருதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு பங்களிக்கும்.
7. நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியம் தருகிறது: நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஆரோக்கியத்தைத் தருகிறது. இவர்களின் இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. அவர்கள் காய்கறிகள், புரதங்கள், முழு தானியங்கள் மற்றும் ராஸ்பெர்ரியை எடுத்துக்கொள்ளும்போது அவர்களது இரத்த சர்க்கரை அளவு நன்கு பாதுகாக்கப்படுகிறது. ஆனால், நீண்ட நாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.