மாதுளை பழம் அதன் இனிப்பு சுவை, அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பரவலாக மக்களால் உண்ணப்படும் ஒரு பழமாகும். ஆனால், கிட்னி பாதிப்பு உள்ளவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடுவது பாதுகாப்பானதா? என்ற கேள்வி பலருக்கு ஏழலாம். சிறுநீரகப் பிரச்சனைகள் உள்ளவர்கள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களை கவனமாகக் கடைபிடிக்க வேண்டியது அவசியம் என்பதால், மாதுளை பழம் போன்ற பழங்களை உட்கொள்வதற்கு முன் மருத்துவ ஆலோசனை பெறுவது முக்கியம்.
மாதுளை பழம் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் பல்வேறு வகையான ஆண்டி ஆக்சிடென்ட்கள் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் உடல்நலத்திற்கு மிகவும் முக்கியமானவை. ஆனால், கிட்னி பாதிப்பு உள்ளவர்களுக்கு சில ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பது பிரச்சனையை ஏற்படுத்தும்.
கிட்னி பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களை கவனமாகக் கடைபிடிக்க வேண்டும். சிறுநீரகங்கள் உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றும் முக்கியமான உறுப்புகள். கிட்னி பாதிப்பு ஏற்படும்போது இந்த செயல்பாடு பாதிக்கப்பட்டு, ரத்தத்தில் கழிவுப்பொருட்கள் குவிந்துவிடும்.
இதனால், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். கிட்னி பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் உணவில் உள்ள புரதம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். ஏனெனில், இந்த ஊட்டச்சத்துக்கள் சிறுநீரகங்களின் வேலையை அதிகரித்து அவற்றின் நிலையை மேலும் மோசமாக்கும்.
மாதுளையில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. கிட்னி பாதிப்பு உள்ளவர்களுக்கு பொட்டாசியம் அதிகமாக இருப்பது ஆபத்தானது. ஏனெனில், பாதிக்கப்பட்ட சிறுநீரகங்கள் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான பொட்டாசியத்தை வெளியேற்ற முடியாமல் போகும். இதனால், ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, தசை பலவீனம் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
கிட்னி பாதிப்பு உள்ளவர்கள் மாதுளை பழத்தை சாப்பிடுவதற்கு முன் தங்கள் மருத்துவரை கட்டாயம் அணுக வேண்டும். மருத்துவர் உங்கள் சிறுநீரகங்களின் நிலை, உங்கள் உடல்நிலை மற்றும் உங்கள் உணவுப் பழக்கவழக்கங்களை கருத்தில்கொண்டு உங்களுக்கு சரியான ஆலோசனையை வழங்குவார். எனவே, நீங்களாகவே எந்த ஒரு முடிவையும் எடுக்காதீர்கள்.
என்னதான் மாதுளை பழம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாக இருந்தாலும், அது கிட்னி பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏற்றதல்ல. குறிப்பாக, இதில் அதிகமாக பொட்டாசியம் இருப்பதால், சிறுநீரகப் பிரச்சனைகள் மேலும் மோசமாகலாம். எனவே, இதை கருத்தில் கொண்டு, உங்களது உணவுப் பழக்கவழக்கங்களை சீராக வைத்துக்கொள்ளவும்.