Caring for the Elderly During the Summer.  
ஆரோக்கியம்

கோடைகாலத்தில் முதியவர்களைப் பார்த்துக்கொள்ளும் வழிமுறைகள்!

கிரி கணபதி

கோடை காலத்தில் நாம் நமது உடல் நலத்தில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டியது முக்கியமோ, அதைவிட முக்கியம் வீட்டில் உள்ள முதியவர்களின் நலனின் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது. வயதானவர்கள் வெப்பம் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளுக்கு எளிதாக பாதிக்கப்படுகின்றனர். எனவே வெப்பம் அதிகமாக இருக்கும் காலங்களில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம். அவை என்னவென்று இப்பதிவில் பார்க்கலாம் வாங்க. 

வயதானவர்கள் குறிப்பாக கோடைகாலத்தில் முறையாக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். தாகம் இல்லாவிட்டாலும் நாள் முழுவதும் அவ்வப்போது போதிய அளவு தண்ணீர் குடிக்க ஊக்குவிக்கவும். அவர்களுக்கு தண்ணீர் எளிதில் கிடைக்கும் வகையில் வைக்கவும். அவ்வப்போது தண்ணீர் குடிக்கும்படி அவர்களுக்கு நினைவூட்டுங்கள். நீரிழப்புக்கு பங்களிக்கும் எந்த உணவுகளையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம். 

கோடைகாலத்தில் வயதானவர்களுக்கு இலகுரக மற்றும் தளர்வான ஆடைகளை தேர்வு செய்து அணியச் செய்யுங்கள். இதன் மூலமாக அவர்களது உடல் வெப்பநிலை சரியாக நிர்வகிக்கப்படும். சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து அவர்களை பாதுகாக்க, வெளியே செல்லும்போது குடை பயன்படுத்தச் சொல்லுங்கள். முடிந்தவரை நிழலிலேயே அவர்களை இருக்கச் செய்வது அவசியம்.

வயதானவர்களுக்கு கோடைகாலங்களில் குளிர்ச்சியான சூழலை உருவாக்கிக் கொடுங்கள். அவர்கள் இருக்கும் பகுதி நன்கு காற்றோட்டமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் அவர்களது அறையில் ஏசி பொருத்துவது நல்லது. வயதானவர்கள் எப்படி இருக்கிறார்கள் என அவ்வப்போது கண்காணிக்கவும். ஏனெனில் கோடைகாலத்தில் வயதானவர்கள் உடலுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்படும் என்பதால், அவர்களுடன் இருந்து பராமரிக்க வேண்டியது அவசியம். 

கோடைகாலத்தில் எல்லாவிதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும் படியான உணவுகளைக் கொடுங்கள். அதிக நீர்ச்சத்துக் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறி உணவுகளை அவர்களது உணவில் சேர்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். மேலும் எளிதில் ஜீரணிக்கக் கூடிய உணவுகளை அவர்களுக்குக் கொடுப்பது மிகவும் அவசியமானது. குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது உணவு கொடுத்துக் கொண்டே இருங்கள். 

அதிக வெப்பம் இருக்கும் நேரங்களில் அவர்களை முடிந்தவரை வீட்டிலேயே இருக்கச் செய்து குளிர்ச்சியாக வைத்திருங்கள். வீட்டில் இருந்தபடியே நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்ற குறைந்த தீவிரம் கொண்ட பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கவும். இது அவர்களது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். 

முடிந்தவரை முதியவர்களை கோடைகாலத்தில் அதிக வேலைகள் செய்யாமல் பார்த்துக் கொண்டு, நீரேற்றத்துடன், முறையான ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை அவர்களுக்கு கொடுத்து வந்தாலே, வெப்பத்தின் தாக்கம் அவர்களை எதுவும் செய்யாது. எனவே இவற்றைப் பின்பற்றி, அவர்களைப் பாதுகாக்க வேண்டியது வீட்டில் உள்ள அனைவரது கடமையாகும். 

தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

இந்த 6 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் ஜாக்கிரதை!  

11 வாரம் 11 சுற்று பிரதட்சிணம் செய்ய தோஷம் நீக்கி அருளும் சனி பகவான்!

மறந்துபோன இந்த கீரைகளின் மகத்துவம் தெரியுமா?

குள்ள நீர்யானைக் குட்டியும், அரிய வகை டைனோசர் இனமும்! 

SCROLL FOR NEXT