Causes and treatment of forefoot eruption in boys and girls 
ஆரோக்கியம்

சிறுவர், சிறுமியருக்கு ஏற்படும் முன்பாத வெடிப்பின் காரணமும், தீர்வும்!

தி.ரா.ரவி

பொதுவாக, குதிகாலில் ஏற்படும் பித்த வெடிப்பு பற்றி எல்லோருக்கும் தெரியும்.  சிறுவர், சிறுமியருக்கு ஏற்படும் முன்பாத வெடிப்பு (Juvenile Plantar Dermatitis) பற்றி சிலருக்குத் தெரியாமல் இருக்கலாம். அது ஏன் வருகிறது என்பது பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

யாருக்கு வருகிறது?: ஐந்தில் இருந்து பதிமூன்று  வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத்தான் முன் பாத வெடிப்பு வரும். இது ஒரு வகையான சரும பிரச்னை. இது பெண் குழந்தைகளை விட, ஆண் குழந்தைகளுக்கு அதிகமாக வருகிறது. பெரியவர்களுக்கு இது வருவதில்லை.

முன் பாத வெடிப்பு தோன்றக் காரணம் என்ன?: தூசி, தும்பு நிறைந்த வீட்டில் நடக்கும், ஓடும் குழந்தைகளுக்கும் வெளியில் புழுதியில் விளையாடும் சிறுவர்களுக்கும் இது வருகிறது. அவர்களின் குதிகால், உள்ளங்கால்கள் வழு வழுவென்று இருக்கும். முன் பாதத்தில் மட்டும் விரல்களை சுற்றியுள்ள இடத்தில் வெடிப்பு தோன்றி. சொரசொரப்பாக இருக்கும். இதனால் பயப்படத் தேவையில்லை. இதை எளிதாக சரிசெய்யலாம்.

தீர்வு: ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீர் நிரப்பி, அதில் சிறிதளவு கல் உப்புப் போட்டு கரைத்து, கால்களை சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின்பு ஈரம் போகத் துடைத்துவிட்டு கால்களில் பெட்ரோலியம் ஜெல்லி தடவி வர, சில நாட்களில் சரியாகிவிடும். இதுபோன்ற குழந்தைகளை வீட்டுக்குள் நடக்கும்போது சாக்ஸ் போட்டுகொள்ளச் சொல்லலாம். வெளியில் செல்லும்போது சரியான ஷூக்களை அணிந்து செல்லலாம். தோல் செருப்புகள் நல்லது. அது முன்புற பாத சருமம் உராய்வதைத் தடுக்கும். தினமும் சாக்ஸ்களை துவைத்து காய போட்டு உலர்த்தி எடுக்க வேண்டும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT