பொதுவாக இரத்த அழுத்தம் 120/80 ஆக இருக்க வேண்டும். மாறாக, இரத்த அழுத்தம் 90/60க்கு குறைவாக இருந்தால், மருத்துவர்கள் அதை குறைந்த இரத்த அழுத்தம் என்று கருதுகின்றனர். குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக, இதயம், மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு இரத்த ஓட்டம் குறையத் தொடங்குகிறது. இரத்த அழுத்தம் திடீரென குறைவதால், மூளைக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் செல்வது குறையத் தொடங்குகிறது. அத்தகைய சூழ்நிலையில், தலைச்சுற்றல் மற்றும் சில நேரங்களில் மயக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
குறைந்த இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சை:
1. உப்பில் உள்ள சோடியம் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. அதனால் டயட்டில் போதுமான அளவு உப்பு இருப்பதை உறுதி செய்வது அவசியம். உப்பு சேர்க்கப்பட்ட கொட்டைகள், பாலாடைக் கட்டிகள், மீன் மற்றும் இறைச்சிகளில் அதிக சோடியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
2. உலர் திராட்சை அட்ரீனல் சுரப்பியின் செயல்பாட்டை தூண்டி இரத்த அழுத்த அளவை சீராக பராமரிக்கிறது.
3. உடலில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டால் இரத்த அழுத்தம் குறைவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதால் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும் இரத்த அழுத்தத்தை சீராக்கும் வழியாகும்.
3. உட்கார்ந்த நிலையில் இருந்து எழுந்திருக்கும்போதும், படுக்கையில் இருந்து எழுந்திருக்கும்போதும், கவனமாக இருப்பது அவசியம்.
4. எழுந்து நிற்பதற்கு முன்பு உங்கள் கால்களையும் கணுக்கால்களையும் சிறிது நீட்டி அசைத்த பின் எழுந்திருக்கவும்.
5. படுக்கையில் இருந்து தடாலென்று எழுந்திருக்காமல், சற்று நிதானமாக ஒரு பக்கமாக சாய்ந்து படுத்து பின்பு எழுந்திருக்கவும்.
6. மது பழக்கம் மற்றும் சிகரெட் இரத்த அழுத்த மாறுபாடுகளை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை விலக்கி வைக்க வேண்டும்.
7. உடலில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாத எளிய உடற்பயிற்சிகளை தினமும் தவறாமல் 30 நிமிடங்கள் மேற்கொள்ள வேண்டும்.
8. தூங்கும்போது உங்கள் தலையை உயர்த்திய நிலையில் வைத்துக் கொண்டுதான் தூங்க வேண்டும்.
9. கனமான பொருட்களை தூக்குவதை குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
10. நீண்ட நேரம் ஒரே இடத்திலேயே அசையாமல் நிற்பதைத் தவிர்த்து, உடலை இயங்கிக்கொண்டே இருக்கச் செய்ய வேண்டும்.
11. கார்போஹைட்ரேட் உட்கொள்வதை குறைப்பது சீரான இரத்த அழுத்தத்திற்கு நேரான வழியாகும்.
12. சாப்பிட்ட பிறகு கண்டிப்பாக சிறிது நேரம் ஓய்வெடுப்பது மிகவும் அவசியம்.
குறைந்த இரத்த அழுத்தம் இருப்பவர்கள் மேற்கண்ட முறைகளைக் கையாண்டாலே ஓரளவு இப்பிரச்னையிலிருந்து விடுபடலாம்.