Countless benefits of dark colored foods 
ஆரோக்கியம்

கருமை நிறம் கொண்ட உணவுகளில் இருக்கும் கணக்கில்லா நன்மைகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

லர்ஃபுல் காய்களும் பழங்களும் ஊட்டச்சத்து வழங்குவதில் முதலிடத்தில் இருக்கையில், அடர்ந்த கருமை நிறம் கொண்ட பல உணவுப் பொருட்கள் மற்ற பொருட்களுக்கிணையாக ஊட்டச்சத்துக்களை தங்களுக்குள் அடக்கி வைத்திருப்பதும் அவை பலரால் ஒதுக்கி வைக்கப்படுவதும் நாம் அறிந்ததே! அப்படிப்பட்ட பொருட்கள் சிலவற்றிலுள்ள சத்துக்கள் பற்றிய விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

பிளாக் பீன்ஸ்: அதிகளவு புரோட்டீன் மற்றும் மொத்த ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகளைச் சீராக்கும் நார்ச்சத்தும் கொண்டது. மேலும், இவை இரத்தத்தில் சர்க்கரை அளவை சம நிலையில் வைத்து, நாள் முழுக்க உடலை சக்தியுடன் இயங்கச் செய்ய உதவுபவை.

பிளாக் பெரி: அதிகளவு வைட்டமின் C யும், K யும், ஆன்டி ஆக்சிடன்ட்களும் கொண்டது. இது மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கும், உடலில் ஏற்படும் வீக்கத்துக்கு எதிராகப் போராடவும் உதவி புரிகின்றன.

பிளாக் லென்டில்ஸ்: கருமை நிற உளுந்து போன்ற பருப்புகள் அதிகளவு புரோட்டீன், இரும்புச்சத்து, நார்ச்சத்து உடையவை. உடல் சரிவிகித உணவு பெற்று நல்ல முறையில் இயங்க உதவும். இதயத்தைச் சுற்றியுள்ள இரத்த நாளங்கள் அடைப்பின்றி நல்ல முறையில் செயல்படவும் உதவுகின்றன.

கருப்பு எள்: கருமை நிறம் கொண்ட சிறு எள் விதைகளில் பெரிய அளவில் நன்மைகள் உள்ளன. கால்சியம், இரும்புச்சத்து, நல்ல கொழுப்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் இவற்றில் உண்டு! இவை எலும்புகளின் ஆரோக்கியம் காக்கின்றன. சருமம் இயற்கையான முறையில் பளபளப்பு பெறச் செய்கின்றன.

கருப்பு நிற குயினோவா: இது உடலுக்குத் தேவையான மொத்த அளவு புரோட்டீனும் கிடைக்கச் செய்யும் திறன் கொண்டது. அமினோ ஆசிட்களை உள்ளடக்கியது. சேதமடைந்த தசைகளைப் புதுப்பிக்கவும், உடலுக்கு தேவையான சக்தியை வழங்கவும் வல்லது.

கருப்பு அரிசி: ‘ஊட்டச்சத்துக்களின் உறைவிடம்’ இது எனலாம். இது அதிகளவு வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள் கொண்டது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோயெதிர்ப்பு சக்திகளின் ஆதாரமாக இது விளங்குகிறது.

பிளாக் டீ: இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களானது இதய ஆரோக்கியத்தைக் காக்கிறது. உடலின் மெட்டபாலிஸம் சரிவர நடைபெறச் செய்கிறது. இது குறைந்த அளவு காஃபின் கொண்டுள்ளதால் குடிப்பதற்கு சுவையான பானமாகிறது.

கருமை நிற பூண்டு: தனித்துவ மணம், ஆன்டி ஆக்சிடன்ட்கள் கொண்டது. கேன்சர் உருவாக்கும் செல்களை எதிர்த்துப் போராடும் குணமுடையது.

கருமை நிற காளான்: இதன் ஷிடேக் (shiitake), பிளாக் டிரம்ப்பெட் (Black trumpet) வகைகளானது பாலிசாச்சரைட்ஸ் (polysaccharides) மற்றும் பீட்டா க்ளூகன்ஸ் (beta glucans) நிறைந்தவை. இவை உடலில் ஏற்படும் வீக்கதுக்கு எதிராகஙப போராடவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவி புரிகின்றன.

பிளாக் சோயா பீன்ஸ்: குறைந்த கொழுப்புச் சத்து, அதிகளவு புரோட்டீன், நார்ச்சத்து கொண்டுள்ளது. உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கிறது. இதய ஆரோக்கியம் காக்கக் கூடியது.

நிற வேறுபாடு பாராமல் மேற்கூறிய உணவுகளையும் நம் தினசரி உணவில் சேர்த்து உண்டு நலம் பல பெறுவோம்.

பல்லிகள் இங்கு சத்தமிடுவதில்லை; கருடன் வானில் பறப்பதில்லை! எங்கு தெரியுமா?

புரதச்சத்து மிகுந்த ஜோரான ரெசிபிக்கள் செய்து அசத்தலாமா?

ஒரு மனிதன் எப்போது மனிதனாகிறான் தெரியுமா?

தென்னிந்தியாவின் தாஜ்மகாலைப் பற்றித் தெரியுமா?

மூச்சிரைப்பு வந்தால் அதை சாதாரணமா நினைக்காதீங்க! 

SCROLL FOR NEXT