Do you feel like someone is squeezing you while you sleep? 
ஆரோக்கியம்

தூங்கும்போது யாரோ உங்களை அமுக்குவதுபோல் உணர்கிறீர்களா?

பாரதி

நீங்கள் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும்பொழுது திடீரென்று யாரோ உங்களை அமுக்குவதுபோல் தோன்றுகிறதா? அப்படித் தோன்றி, ‘யாரோ என்னை தூக்கத்தில் அமுக்கினார்கள்’ என்று யாரிடமாவது கூறினால், ‘அது பேய். உங்கள் வீட்டில் கெட்ட சக்தி உள்ளது. பரிகாரம் செய்’ என்று கூறி விபூதி அடித்து உட்கார வைப்பார்கள்.

ஆனால், உண்மையில் அது பேயோ பிசாசோ இல்லை. இது ஒரு அறிவியல்ரீதியான நிகழ்வு. அதன் பெயர் Sleeping Paralysis. இது ஏற்படுவதற்கு முக்கியக் காரணம். நம் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் நியூரான்ஸ்தான். தூக்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இந்த  நியூரான் செல்கள் சரிவர இயங்காமல் போகும்போது ‘Sleeping Paralysis’ நிகழ்கிறது. அதாவது உடல் தூங்கும் நிலையிலும், ஆழ்மனது விழிப்புடன் இருக்கும் நிலை. பொதுவாக இது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. சில சமயங்களில் இது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இந்த Sleeping Paralysis 18 வயதிலிருந்து ஆரம்பமாகும். 20 முதல் 30 வயது உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும்.

அறிகுறிகள்: Sleeping Paralysis ஏற்படும்போது அசைய முடியாது, பேச முடியாது. ஏனெனில். அந்த நிலை ஏற்படும்போது, நீங்கள் ஆழ்மனதிற்குள் சென்று விடுவீர்கள். இத்தருணங்களில் படபடப்பாக உணர்வோம். அதிகமாக வேர்க்கக்கூடும். மற்றும் ஏதோ ஒரு மாயையான உருவம் தெரிவதுபோன்ற பிரமை ஏற்படும். இதற்கு பெயர் Hallucinations.

உதாரணத்திற்கு, அறையில் நாற்காலியின் மேல் துணிமணிகளை மடிக்காமல் கலைந்து போட்டிருப்பின் அது உங்களுக்கு யாரோ உக்கார்ந்து இருப்பதுபோல் தெரியும். இதுதான் மாயை. இதுபோன்ற பிரமை ஏற்பட்டு துக்கத்திலிருந்து வெளியே வந்தவுடன் தலைவலி, பய உணர்வு போன்றவை ஏற்படும்.

விளைவுகள்: இந்த Sleeping Paralysis அடிக்கடி ஏற்பட்டால் மன அழுத்தம் உண்டாகும். எப்போதும் ஒரு காரணமில்லாத சோகம் மற்றும் களைப்பு ஏற்படும். இதற்கு டாக்டர் வரைப் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனெனில் இதற்கான மருந்து எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இது அடிக்கடி அனுபவித்தவர்கள் சில டிப்ஸ் கூறியுள்ளார்கள். Sleeping Paralysis நிகழும்போது, உடம்புக்கு ஏதோ ஒரு அசைவு கொடுங்கள். விரல்களை அசையுங்கள் அல்லது கால், கைகளை அசையுங்கள்.

தடுக்கும் வழிகள்:

1. சரியான நேரத்தில் தூங்க வேண்டும். மல்லாந்து படுக்காமல் ஒருக்களித்து படுப்பது நல்லது. மன அழுத்தம் ஏற்பட்டால் அதற்கான தீர்வினை கண்டுபிடித்து சரி செய்யவும்.

2. தூங்கும் அறையில் ஊதா நிற லைட்டை தவிர்க்கவும். மற்றும் 8 மணி நேரம் சரியாகத் தூங்கவும்.

3. படுக்கை அறையை தூங்குவதற்கு ஏதுவாக மாற்றிக்கொள்ள வேண்டும். பகலில் வெளிச்சமாகவும் இரவில் இருட்டாகவும் வைத்துக்கொள்ளவும்.

4. தினமும் யோகா, தியானம் செய்ய நேரத்தை ஒதுக்கிக்கொள்ளுங்கள்.

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

உலகின் மிகச் சிறிய மரம் எது? வித்தியாசமான இந்த ஐந்து மரங்கள் பற்றி படித்தால் தெரியும்!

மக்கானா Vs வேர்க்கடலை: உடல் எடையை குறைப்பதில் எது சிறந்தது?

SCROLL FOR NEXT