Peanuts 
ஆரோக்கியம்

வேர்க்கடலை சாப்பிடக் கூடாத 5 பேர் யார் தெரியுமா?

ம.வசந்தி

நிலக்கடலை, கச்சான், மலாட்டை, கலக்கா ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் வேர்க்கடலையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்கள் பல இருந்தாலும், இதை சாப்பிடக்கூடாத 5 விதமான நபர்களும் உள்ளனர். அவர்கள் யார் யார் என்பது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. அமிலத்தன்மை: அடிக்கடி அசிடிட்டி பிரச்னை உள்ளவர்கள், வயிற்று வலி, வாயு, அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிறு  தொடர்பான பிரச்னை உள்ளவர்களுக்கு வேர்க்கடலை மலச்சிக்கலை ஏற்படுத்தும் கூறுகள் இருப்பதால் இவர்கள் வேர்க்கடலை சாப்பிடுவதைத்  தவிர்க்க வேண்டும்.

2. யூரிக் அமில பிரச்னை: வேர்க்கடலையில் உள்ள அதிக புரதச்சத்து உடலில் யூரிக் அமிலத்தின் அளவை அதிகரித்து ஏற்கெனவே மூட்டுவலி அல்லது ஹைப்பர்யூரிசிமியா பிரச்னை உள்ளவர்களுக்கு அவர்களது நிலைமையை மோசமாக்கும்  என்பதால் வேர்க்கடலையை இவர்கள் சாப்பிடவே கூடாது.

3. உயர் இரத்த அழுத்தம்: வேர்க்கடலையில் சுவையை சேர்க்க சோடியத்தின் அளவை அதிகரிப்பதால் உயர் இரத்த அழுத்த பிரச்னை இருப்பவர்கள் கவனமாக இதை சாப்பிட வேண்டும். வறுத்த வேர்க்கடலை அல்லது உப்பு சேர்க்கப்பட்ட வேர்க்கடலை வெண்ணெய் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்குமாதலால், உப்பு இல்லாமல் வேர்க்கடலை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.

4. எடை இழப்பு: வேர்க்கடலையில் கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வேர்க்கடலை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

5. ஒவ்வாமை: வேர்க்கடலை  அலர்ஜி உள்ளவர்கள் வேர்க்கடலையை உட்கொண்டால், அரிப்பு, வீக்கம், சுவாசிப்பதில் சிரமம் மற்றும் அனாபிலாக்ஸிஸ் போன்ற நிலைமைகளை உருவாகும். ஆதலால் ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்கள் வேர்க்கடலையை சாப்பிடக் கூடாது.

மேற்கூறிய ஐந்து பிரச்னை உள்ள நபர்கள் வேர்க்கடலையை சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால் அளவோடு நேரம் அறிந்து சாப்பிட்டு உடல் நலத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

முதன் முதலாக விமானம் ஓட்டியவர் ஓர் இந்தியர்! ரைட்டா, ராங்கா?

நல்லெண்ணெய் Vs தேங்காய் எண்ணெய்: ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது?

மிகவும் விலையுயர்ந்த அக்வாரியம் வகை மீன்கள்!

காபியே மருந்தாகும் மாயம் தெரியுமா?

திரைத்துறையில் ஒரு மாபெரும் கவிஞனின் பங்கு!

SCROLL FOR NEXT