தண்ணீர் விரதத்தின் அற்புதப் பலன்கள்
தண்ணீர் விரதத்தின் அற்புதப் பலன்கள்  www.onlymyhealth.com
ஆரோக்கியம்

தண்ணீர் விரதம் தெரியுமா?

கல்கி டெஸ்க்

-ரா.வ. பாலகிருஷ்ணன்  (தமிழ்க் காதலன்)

லகில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் ஓய்வு என்பது அத்தியாவசியமான ஒன்று. தேவையான அளவில் ஓய்வு எடுத்தால்தான் அடுத்தடுத்த வேலைகளை நம்மால் சுறுசுறுப்பாகச் செய்யமுடியும். நாள்தோறும் வேலைக்குச் சென்று உழைக்கும் நமக்கே அடிக்கடி ஓய்வு தேவைப் படும்போது, அன்றாடம் நாம் உண்ணும் உணவுகளைச் செரித்துக்கொண்டிருக்கும் செரிமான மண்டலத்திற்கும் ஓய்வு அவசியம் தேவை என்பதை நாம் உணரவேண்டும். நம் உடல் உறுப்புகள் அனைத்திற்கும் அவ்வப்போது ஓய்வளிப்பது நம்முடைய உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. அவ்வகையில், மாதத்திற்கு ஒருநாள் தண்ணீர் விரதம் இருப்பதனால் கிடைக்கும் பல நன்மைகள் குறித்து இப்போது காண்போம்.

தண்ணீர் விரதம் என்றால் ஒருநாள் முழுக்க எந்த உணவும் சாப்பிடாமல், தண்ணீரை மட்டுமே குடித்து அன்றைய தினத்தைக் கழிப்பதாகும். இந்த விரதத்தை குறைந்தபட்சம் 24 மணி நேரம் முதல் அதிகபட்சம் 72 மணி நேரம் வரைகூட கடைப்பிடிக்கலாம். தண்ணீர் விரதத்தைப் புதிதாக மேற்கொள்பவர்கள், முதலில் 24 மணி நேரம் வரை உணவு சாப்பிடாமல் இருப்பது நலம். இவ்விரதத்தை 21 தினங்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை என மேற்கொள்ளலாம். 

தண்ணீர் விரதத்தை முடித்தபிறகு உடனேயே, வயிறு நிரம்பும் அளவுக்குச் சாப்பிடுவது மிகவும் தவறான செயல். அப்படிச் சாப்பிட்டால் உடல் நலத்திற்குக் கேடுதான் உண்டாகுமே தவிர, நாள் முழுவதும் தண்ணீர் விரதம் இருந்தும், அது பயனில்லாமல் போகும்.

தண்ணீர் விரதத்தின் அற்புதப் பலன்கள்:

மாதத்திற்கு ஒருமுறை தண்ணீர் விரதம் இருப்பதால், உடலில் இருக்கும் இரத்ததை சீராக வைத்திருக்க உதவி புரிகிறது.

இரத்த அழுத்தம் குறைந்து, இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.

உடலில் உள்ள உள்ளுறுப்புகள் சுத்தமாவது மட்டுமின்றி, உடலின் எடையும் குறையும்.

இன்சுலின் அளவும் சீரான அளவில் இயங்கும்.

நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்.

தண்ணீர் விரதத்தின் அற்புதப் பலன்கள்...

 விரதத்தை தவிர்க்க வேண்டியவர்கள்

ண்ணீர் விரதத்தை மேற்கொள்பவர்கள் முதலில் மருத்துவரின் பரிந்துரையைப் பெற்றுக்கொள்வது அவசியமாகும். நீரிழிவு வியாதி உள்ளவர்கள், மிக சமீபத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை செய்தவர்கள், நிறைமாத கர்ப்பிணிப் பெண்கள், சமீபத்தில் குழந்தை பெற்ற தாய்மார்கள் மற்றும் தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் நோயாளிகள் மேற்கொள்ளக் கூடாது.

தண்ணீர் விரதத்தின் தீமைகள்

ரு சிலருக்கு தண்ணீர் விரதம் ஒத்துப் போகாது. ஆகையால், அப்படிப்பட்ட நபர்களுக்கு நெஞ்செரிச்சல் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. மேலும், சிறுநீரக செயல்பாட்டையும் மோசமாக்கி விடும்.

சிலருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்புண்டு.

யூரிக் அமில உற்பத்தி அதிகரிப்பதற்கான வாய்ப்புண்டு. 

தண்ணீர் விரதத்தினை நீண்ட நாட்களுக்கு மேற்கொண்டால் மூளை மூடுபனி ஏற்படும் வாய்ப்புள்ளது.

பசியானது மனநிலையின் ஏற்ற இறக்கங்களைத் தூண்டிவிடும் வாய்ப்பு அதிகம்.

வாசனைகளின் சிறப்பு தெரியுமா உங்களுக்கு?

சிலந்திகளும் கரையான்களும் வாழும் இடமானது இது!

கேரளாவின் சுவை மிகுந்த இரண்டு தீயல் வகைகள்!

வீட்டுக்கு அழகு சேர்க்கும் போன்சாய் மரம் வளர்ப்பு மற்றும் பராமரிப்பு!

பால் Vs தயிர்: குடல் ஆரோக்கியத்திற்கு எது நல்லது தெரியுமா? 

SCROLL FOR NEXT