Do you know the 6 mistakes you shouldn't make after dinner? 
ஆரோக்கியம்

இரவு உணவுக்குப் பின் செய்யக்கூடாத 6 தவறுகள் தெரியுமா?

எஸ்.மாரிமுத்து

பொதுவாக, சிலர் இரவு உணவு உண்டவுடன் தூங்குவார்கள். சிலர் குளிப்பார்கள். இன்னும் சிலர் புகைபிடிப்பார்கள். சிலர் உண்ட உணவு செரிமானம் ஆகும் என நினைத்து நடப்பார்கள். இவை எல்லாம் இரவு உணவுக்கு பின் செய்யக்கூடாத தவறுகளாகும்.

நடைப்பயிற்சி: சிலர் இரவு உணவு சாப்பிட்டவுடன் நடப்பார்கள். ‘இப்படிச் செய்வது உடல் நலத்திற்கு நல்லது’ என்று கூறுவார்கள். ஆனால், அது முற்றிலும் உண்மை இல்லை. ஏனெனில், சாப்பிட்ட உடனே நடைப்பயிற்சி செய்தால் கை, கால்களுக்கு இரத்தம் செல்லும். இது செரிமானத்தில் குறுக்கிடும். எனவே, சாப்பிட்ட உடனே நடக்கக் கூடாது. ஒரு மணி நேரம் கழித்து நடக்கலாம்.

பழங்கள் சாப்பிடுவது: இரவு உணவு சாப்பிட்ட உடனே பழங்கள் சாப்பிடுவது பலரது வழக்கமாக உள்ளது. இப்படிப் பழங்கள் சாப்பிடுவதால் வயிறு வீங்கி விடும். வாய்வு பிரச்னைகள் ஏற்படும். சாப்பிட்டது சரியாக ஜீரணமாகாது.

அதிகத் தண்ணீர் குடிப்பது: நம் உடலுக்குத் தண்ணீர் தேவைதான். ஆனால், அதை சரியான நேரத்தில் குடிக்க வேண்டும். குறிப்பாக, இரவு உணவுக்குப் பிறகு தண்ணீரை 30 நிமிடங்கள் கழித்தே குடிக்க வேண்டும். அந்த நீர் செரிமான அமைப்பின் வேலையைத் தடுக்கும்/ இதனால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படும்.

டீ ,காபி குடிக்கக் கூடாது: நைட் ஷிப்ட் வேலை பார்ப்பவர்கள் இரவு உணவுக்குப் பிறகு உடனடியாக டீ அல்லது காபி குடித்தால் செரிமானம் பாதிக்கப்படும். வாய்வு அமிலத் தன்மைகள் ஏற்படும். உணவில் உள்ள சத்துக்கள் உடலுக்குக் கிடைக்காது. இரும்பு சத்து உடலால் உறிஞ்சப்படாது. எனவே, சாப்பிட்டவுடன் டீ, காபி குடிக்கக் கூடாது.

குளிக்கக் கூடாது: சாப்பிட்ட உடனேயே குளித்தால் உடலின் மற்ற பாகங்களுக்கு செல்லும் இரத்தம் செரிமானம் பாதிக்கப்படும். செரிமான மண்டலத்துக்கு இரத்தம் சரியாகப் போவதில்லை. இதனால் செரிமானம் சீராக நடைபெறாது.

புகைப்பிடித்தல்: இரவு உணவிற்குப் பிறகு உடனடியாக புகை பிடிக்கக் கூடாது. இது உங்கள் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும். இது புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். இரவு உணவுக்குப் பிறகு புகை பிடிப்பது பல நோய்களுக்கு வழி வகுக்கும்.

Motivational Quotes: உங்களை மனதளவில் வலிமையாக்கும் 12 மேற்கோள்கள்! 

செரிமான உறுப்புகளின் ஆரோக்கியம் காக்க கார்போஹைட்ரேட்ஸ் தரும் 6 நன்மைகள்!

பிரம்ம தேவனால் நடத்தப்பட்ட திருப்பதி பிரம்மோத்ஸவத்தின் வரலாறு தெரியுமா?

இந்தியத் திருமணங்களில் எதிர்காலம்… சுமையா? சுலபமா?

சூரியன் இன்னும் கொஞ்ச காலம்தான்… மனிதர்களின் நிலைமை? 

SCROLL FOR NEXT