https://www.youtube.com
ஆரோக்கியம்

கேழ்வரகு தோசையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

தென்னிந்திய உணவுகளில் பிரசித்தமானது இட்லிக்கு அடுத்ததாக தோசை எனலாம். சிறு தானியங்களின் உபயோகம் மற்றும் அதிலிருக்கும் ஊட்டச் சத்துக்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்ட பின், அத்தானியங்களை உபயோகித்து செய்யப்படும் உணவுகள் மீது ஓர் ஈர்ப்பு ஏற்பட்டிருப்பது உண்மை. ராகி எனப்படும் கேழ்வரகை ஊட்டச் சத்துக்களின் பவர் ஹவுஸ் என்றே கூறலாம். இதிலடங்கியுள்ள முக்கிய ஊட்டச் சத்துக்களாக கால்சியம், இரும்புச் சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றைக் கூறலாம். ராகி மாவைக் கரைத்து பத்து மணி நேரம் நொதிக்க வைத்து அதில் தோசை செய்தால் அதிலுள்ள ஊட்டச் சத்துக்கள் மேலும் கூடும். ராகி தோசையிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ராகி ஒரு குளுடன் ஃபிரீ உணவாகும். எனவே 'சீலியாக்' (Celiac) எனப்படும் ஒருவகை நோய் உள்ளவர்கள் மற்றும் குளுடன் சென்சிடிவிட்டி உள்ளவர்கள் உள்பட அனைவரும் உட்கொள்ள ஏற்ற உணவு இது. குளுடன் ஒவ்வாமை உள்ளவர்கள் கோதுமை உணவுக்குப் பதிலாக  ஒரு மாற்றாக இதை வைத்துக் கொள்ளலாம்.

ராகி ஒரு குறைந்த க்ளைசெமிக் இன்டெக்ஸ் கொண்ட தானியம். எனவே, கேழ்வரகில் தயாரிக்கப்படும் எல்லா வகை உணவுகளையும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் தாராளமாக உட்கொள்ளலாம். ராகி இரத்த சர்க்கரை அளவை சம நிலையில் வைத்துப் பராமரிக்கவும் உதவும்.

ராகியில் பாலிபினால் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை எதிர்த்துப் போராடி, கேன்சர் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் ஆபத்தைத் தடுக்கின்றன.

ராகி தோசையிலுள்ள அதிகளவு நார்ச் சத்தானது கூடுதல் நேரம் வயிற்றுக்குள் தங்கி பசியுணர்வைத் தள்ளிப் போகச் செய்கிறது. இதனால் உட்கொள்ளும்  கலோரி அளவு குறைந்து எடைப் பராமரிப்பிற்கு உதவியாகிறது. மேலும், நார்ச் சத்து சிறப்பான ஜீரணத்துக்கும் மெட்டபாலிசம் நல்ல முறையில் நடைபெறவும் உதவி புரிகிறது.

ராகி தோசையிலுள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அவற்றை வலுவடையச் செய்து ஆஸ்ட்டியோபொரோசிஸ் நோய் வராமல் தடுக்க உதவி புரிகின்றன.

இத்தனை நன்மைகள் தரும் சுவை மிக்க ராகி தோசையை நாமும் அடிக்கடி உட்கொண்டு  ஆரோக்கியம் காப்போம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT