Do you know the problems caused by excessive use of steroid pills? https://www.bbc.com/tamil
ஆரோக்கியம்

ஸ்டீராய்ட் மாத்திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் தெரியுமா?

நான்சி மலர்

ம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் மாத்திரை, மருந்துகளை உபயோகப்படுத்துவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சாதாரணமாக மருந்து கடைகளில் கிடைக்கும் மாத்திரையான பேராசிட்டமால் ஜுரத்துக்கும், தலைவலி என்று வந்தால் டார்டும் அசால்டாக கடையிலிருந்து வாங்கி வைத்து கொண்டு உபயோகித்துக் கொண்டிருப்போம். இதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி பெரிதாக நாம் யோசிப்பதில்லை. அதாவது, எளிதாகக் கிடைக்கிறது என்று சில மாத்திரைகளை அதிக அளவில் வாங்கி வைத்து கொண்டு தலைவலி, ஜுரம் என்று வரும்போது அதை அடிக்கடி பயன்படுத்துவது ஆபத்தில் முடியும். இதனால் சில மாத்திரைகளுக்கு அடிமையாகக் கூடிய வாய்ப்புகளும் உள்ளது.

தலைவலி, ஜுரம் போன்ற உடல் உபாதைகள் வரும்போது அதிக அளவில் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் இதுபோன்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்வது கெடுதலாகும். மருந்து உட்கொள்வதில் கண்டிப்பாக மருத்துவரின் பரிந்துரை மிகவும் அவசியம்.

சில மாத்திரைகளை குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே வாங்கி பயன்படுத்த மருத்துவர் பரிந்துரை செய்திருப்பார். ஆனால், சிலர் அதையே வாங்கி பல காலம் பயன்படுத்துவார்கள். அதே நோய்க்கான புதிதாக வரும் அறிகுறிகளை வைத்து அந்த நோய்க்கு வேறு விதமான மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பர். அதனால் மருத்துவரை பார்க்காமலேயே பழைய மருந்துகளை உபயோகிப்பது மிகவும் தவறாகும். அது வேறு ஏதேனும் உடல் உபாதைகளுக்கு வழிவகுத்து விடும்.

அதேபோல், ஸ்டீராய்டு மாத்திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் நிறைய பக்கவிளைவுகள் ஏற்படும். ஸ்டீராய்டு மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வாங்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டீராய்டு மாத்திரைகளை அதிகம் பயன்படுத்துவதால் அஜீரணக் கோளாறு, உடல் எடை கூடுதல், தூக்கமின்மை, அதிகமாக எரிச்சலடைதல் போன்ற பிரச்னைகள் வரும்.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் வலியை போக்குவதற்காக மெப்தால் போன்ற மாத்திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவதுண்டு. இப்படிப் பயன்படுத்துவதால் இயற்கையாக வலியை தாங்கும் தன்மை போய், வலி ஏற்படும் போதெல்லாம் மாத்திரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். எனவே, மருந்து, மாத்திரைகள் பயன்படுத்தும்போது எப்போதும் கவனமாகவே இருக்க வேண்டும்.

சாதாரண மாத்திரைதானே என்று அலட்சியமாக இருப்பதும், அதை அதிக அளவில் பயன்படுத்துவதும் தவறாகும். சிறு பிரச்னைதானே என்று நாமே மருந்து கடைகளில் மருந்து வாங்கி சாப்பிடும் பழக்கத்தை விடுத்து, மருத்துவரின் பரிந்துரையின்பேரில் சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.

முள்ளங்கி ஜூஸின் ஆரோக்கிய பலன் தெரிஞ்சா குடிக்காம விடவே மாட்டீங்க!

அன்றாட சிறு சிறு உடல் பிரச்னைகளைப் போக்கும் எளிய உணவு மருத்துவம்!

இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தால் இந்தியர்களுக்கு என்ன நன்மை? வாங்க தெரிஞ்சுக்கலாம்! 

உணவில் ருசிக்காக சேர்க்கப்படும் தக்காளியில் இத்தனை சத்துக்களா?

உலகிலேயே மிக பெரிய ரூபிக்ஸ் க்யூப் (Rubik’s Cube) எங்கு உள்ளது, அதன் எடை என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT