காப்பர் நம் உடலின் உயிரியக்கத்திற்கு உதவக்கூடிய ஒரு கனிமச்சத்து. ஆன்டி ஆக்சிடன்ட்கள் கொண்டது. ஃபிரி ரேடிகல்களை எதிர்த்துப் போராடக்கூடியது. உடலின் சக்தியை அதிகரிக்க, மூளை ஆரோக்கியம் மேம்பட, இரத்த சிவப்பு அணுக்களின் உற்பத்தி பெருக, எலும்புக் கூட்டின் வடிவை அமைக்க, சரும ஆரோக்கியம் காக்க என பல இயக்கங்களுக்கு மற்ற கனிமச்சத்துக்களுடன் இணைந்து பணியாற்றுகிறது காப்பர்.
காப்பர் சத்து உடலில் குறையும்போது மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி பாதிக்கக்கூடும். இதனால் மறதி நோய் வர வாய்ப்புண்டாகும். அனீமியா போன்ற இரத்த சோகை நோயும் வரக்கூடும்.
காப்பர் சத்து அதிகமுள்ள உணவுகள்: ஒரு கப் எள்ளில் 5.9 mg; 28 கிராம் முந்திரியில் 0.6 mg; ஒரு கப் கொண்டைக் கடலையில் 0.57 mg; ஒரு கப் சோயா பீன்ஸில் 0.2 mg; ஒரு உருளை கிழங்கில் 0.34 mg; ஒரு ஸ்வீட் பொட்டட்டோவில் 0.13 mg; ஒரு டார்க் சாக்லேட்டில் 0.015 mg; காலே, பசலைக்கீரை போன்றவற்றில், ஃபிரஷ் ஃபுரூட்ஸ், வெஜிடபிள்களிலும் காப்பர் சத்து அதிகம் உள்ளது.
நம்மில் ஒருவருக்கு ஒரு நாளைக்குத் தேவையானது 900 மைக்ரோகிராம் காப்பர் மட்டுமே. எனவே, காப்பர் சத்து அடங்கிய உணவுப்பொருட்களை தேவையான அளவு மட்டும் எடுத்துக்கொள்வது நலம் தரும். உடலில் காப்பர் சத்தின் அளவு அதிகரிக்கும்போது குமட்டல், வாந்தி, பேதி போன்ற ஆரோக்கியக் குறைபாடுகள் உண்டாகும். நச்சுக்களும் அதிகரிக்கும். தொடர்ந்து அதிகளவு காப்பர் எடுத்துக் கொண்டிருந்தால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் உண்டாகும்.
எனவே, ஊட்டச் சத்துக்கள் அதிகமுள்ள உணவாயிருந்தாலும், சத்துக்கள் சமநிலையில் இருக்கும்படி பார்த்து, அதை அளவோடு உட்கொண்டு நோயின்றி வாழ்வோம்.