Swimmer’s Ear https://www.dmchealth.care
ஆரோக்கியம்

நீச்சல் காது என்றால் என்ன தெரியுமா? அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை அறிவோம்!

தி.ரா.ரவி

நீச்சல் காது (Swimmer’s Ear) என்பது காதுகளின் வெளிப்புறத்தில் ஏற்படும் ஒரு வகை தொற்றைக் குறிக்கிறது. நீச்சல் குளம், ஆறுகளில் குளிக்கும்போது அல்லது வீட்டில் குளிக்கும்போது காதுகளில் தண்ணீர் புகுந்து கொள்வதுண்டு. குளித்து முடித்த பின்பு காதில் தண்ணீர் தேங்குவது பாக்டீரியா வளர்ச்சியை ஊக்குவித்து தொற்றை உருவாக்குகிறது. காது ட்ரம்மில் இருந்து தொடங்கி தலை வரை செல்லும் நீண்ட கால்வாய் போன்ற பகுதியில் இந்தத் தொற்று ஏற்படுகிறது.

நீச்சல் காது, ஓடிடிஸ் எக்ஸ்டெர்னா என்றும் அழைக்கப்படுகிறது. சிலர் காதுகளில் புகுந்த தண்ணீரை சுத்தம் செய்கிறேன் என்று காட்டன் பட்ஸ் அல்லது வேறு ஏதாவது பொருள்களை வைத்து காதுகளை சுத்தம் செய்யும்போது அது காதுகளில் சேதத்தை ஏற்படுத்த வித்திடுகிறது. அதனாலும் தொற்று உருவாகும்.

நீச்சல் காதின் அறிகுறிகள்: காதுகளின் வெளிப்புறம் சிவந்து போதல், காது எரிச்சல், அதிக காது வலி, கேட்பதில் சிரமம், அதில் புண்கள் உண்டாகுதல் போன்றவை.

1. காது வலி: இது முதன்மையானது. வெளிப்புறக் காதைத் தொடும்போது அல்லது இழுக்கும்போது வலி கடுமையானதாக இருக்கும்.

2. அரிப்பு, சிவத்தல், வீக்கம்: காதுகளின் கால்வாய் பகுதியில் அரிப்பு ஏற்படலாம். வெளிப்புற காது மற்றும் காது கால்வாய் சிவந்து போய் விடும். மேலும், அதில் வீக்கங்கள் ஏற்படலாம்.

3. தற்காலிக காது கேளாமை: சிலருக்கு தற்காலிகமாக காது கேட்காமல் பிரச்னை உண்டாகலாம். கடுமையான சந்தர்ப்பங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் வரலாம்.

4. சீழ் உருவாதல்: காதிலிருந்து ஒரு தெளிவான மனமற்ற நீர் போன்ற பொருள் வெளியேறும். மேலும். நோய்த் தொற்று காரணமாக சீழ் உருவாகலாம்.

சிகிச்சை முறைகள்:

மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டால் காதுகளில் இருக்கும் குப்பை அதிக மெழுகு ஆகிவற்றை அகற்றி விடுவார். பின்பு காது சொட்டு மருந்து பரிந்துரை செய்யவார்.

நீச்சல் காது பாதிப்பில் இருக்கும்போது, குளிக்கும்போது ஷவர் கேப் பயன்படுத்தி காதுகளை மூடிக்கொண்டு குளிக்க வேண்டும். நீந்துவதைத் தவிர்க்க வேண்டும். காதுகளில் எதிர்பாராத விதமாக தண்ணீர் நுழைந்து விட்டால் தலையை சாய்த்து தண்ணீரை வெளியேற்றலாம்.

நீச்சல் காது வராமல் இருக்க என்ன செய்யலாம்?: எப்போதும் தலைக்குக் குளிக்காமல் உடலுக்கு மட்டும் குளிக்கும்போது ஷவர் கேப் போட்டுக் கொண்டு குளிப்பது நல்லது. குளித்த பின்பு தலையை இரு புறமும் சாய்த்து காது மடலில் இருந்து தண்ணீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும். காதுகளை நன்றாக உலர வைக்க வேண்டும். காதுகளை சுத்தம் செய்ய காட்டன் பட்ஸ், விரல்கள் அல்லது ஹேர் பின் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. நீச்சல் அடித்து முடித்த பின் காது உலர்த்துவதற்கு காதுக்கான சொட்டு மருந்தை விடலாம்.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை நிரூபித்த முதல் இந்திய விஞ்ஞானி!

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

SCROLL FOR NEXT