Japanese food habits 
ஆரோக்கியம்

'ஹரா ஹச்சி பூ' தியரி என்றால் என்னவென்று தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

ப்பான் நாட்டு மக்கள் தங்களுக்கு வயதாகி விட்டதை மறைக்கவும் இளமையான தோற்றத்துடன் காணப்படவும் 5 முக்கியமான பழக்க வழக்கங்களை, கலாசார முக்கியத்துவம் அறிந்து தவறாமல்  கடைப்பிடித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் 'ஹரா ஹச்சி பூ' (Hara Hachi Bu) தியரி. இந்த 5 பழக்க வழக்கங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. ஆரோக்கியம்: ஜப்பானியர்களின் உணவு எப்பொழுதும் சரி விகிதத்தில் அமைந்த சமநிலையான ஊட்டச்சத்துமிக்க உணவாகும். இதில் காய்கறிகள், மீன், இறால் போன்ற கடல் உணவுகள், புரோட்டீன் சத்து அதிகம் நிறைந்த புதிதாகச் சேகரித்த மூலிகை இலைகள், கனிமச் சத்துக்கள், நார்ச்சத்து போன்ற அனைத்து வகையான சத்துக்களும் நிறைந்திருக்கும். இவை உடலில் உள்ள நச்சுக்களைக் குறைக்கவும், அதிக வயதாகும் முன்பே வயதான தோற்றம் வருதைத் தடுக்கவும் உதவி புரியும்.

2. உடற்பயிற்சி: தினசரி வாழ்க்கையில் முக்கியமான அங்கம் வகிப்பது உடலை எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருப்பது என ஜப்பானியர்கள் முழுமையாக நம்புகின்றனர். தினமும் சைக்கிள் ஓட்டுவது, சில வகை தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வது போன்றவற்றுடன் நடைப்பயிற்சியையும் தொடர்ந்து  செய்து வருகின்றனர்.

3. க்ரீன் டீ: ஜப்பானியர்களின் தவிர்க்க முடியாத முக்கியமான பழக்க வழக்கங்களில் ஒன்று க்ரீன் டீ அருந்துவது. அதற்குக் காரணம் அதில் அடங்கியுள்ள அதிகளவிலான ஆன்டி ஆக்ஸிடன்ட்களேயாகும். ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உண்டாகும் வீக்கங்கள் மற்றும் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கவும், தீங்கிழைக்கும் ஃபிரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடவும் உதவும்.

4. 'ஹரா ஹச்சி பூ' தியரி: ஜப்பானியர்கள் பின்பற்றும் இந்த முக்கியமான தியரியின் அர்த்தம், ‘வயிற்றின் கொள்ளளவில் எண்பது சதவிகிதம் உண்பது’ என்பதாகும். ஜப்பானின் ஒகினாவா (Okinawa) என்னுமிடத்தில் பிறந்த இந்த 'ஹரா ஹச்சி பூ' தியரி இன்றளவும் மக்களிடையே, அளவுக்கு அதிகமாக  உணவை உட்கொள்ளாமல், மைண்ட்ஃபுல் ஈட்டிங் (Mindful Eating) முறையை பின்பற்ற வேண்டும் என்ற கலாசார  வழக்கத்தை நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர்களின் உடல் எடையை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும், உடம்பின் தகுதியை (fitness) பலமாக வைத்துப் பாதுகாக்கவும் முடிகிறது.

5. சரும ஆரோக்கியம்: சரும ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள் ஜப்பானியர்கள். சருமத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருப்பது மற்றும் சருமத்தில் நீரேற்றம் குறையாமல் பாதுகாப்பது போன்ற எளிய வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றுபவர்கள் ஜப்பானியர். மேலும், எந்நேரமும் குடையுடனேயே வலம் வருபவர்கள். இதனால் அவர்களின் சருமம் சூரியனின் சூடான ஒளிக்கதிர்களின் தாக்கத்திலிருந்து சேதமடையாமல் காக்கப்படுகிறது.

ஜப்பானியர்களின் இந்த 5 விதமான பழக்க வழக்கங்களை அனைத்து நாட்டினரும் பின்பற்றிப் பயனடையலாம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT