Do you know which are the six types of fruits that help you lose weight?
Do you know which are the six types of fruits that help you lose weight? ValentynVolkov
ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்க உதவும் ஆறு விதமான பழங்கள் எவை தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

ன்று பலரின் பிரச்னையாக இருப்பது உடற்பருமன்தான். ஜிம்முக்கு செல்வது, டயட்டில் இருப்பது, நடைப்பயிற்சி உடற்பயிற்சி செய்வது என்று பலவிதமான முயற்சிகளை செய்கிறார்கள். வாழைப்பழம், மாம்பழம் பலாப்பழம் போன்றவை உடல் எடையை அதிகரிக்கும். ஆனால், சில பழங்களை உண்டால் உடல் எடையை குறைக்க உதவும். அவை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. பெர்ரி பழங்கள்: பெர்ரி வகைப் பழங்களான ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, பிளாக் பெர்ரி போன்ற பழங்களில் கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமும் உள்ளன. இவற்றை தினமும் உட்கொண்டால் அவை உடல் எடையை குறைக்க உதவுகின்றன.

2. ஆப்பிள்: நீர்ச்சத்து நிறைந்த நார்ச்சத்து அதிகம் உள்ள ஆப்பிள்கள் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தினமும் காலையில் ஒரு முழு ஆப்பிளை ஒருவர் உண்டு வந்தால் நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. வயிறு நிறைந்த உணர்வைத் தரும்.

3. கிரேப் பழம்: பார்ப்பதற்கு ஆரஞ்சு பழத்தைப் போலவே இருக்கும் கிரேப் பழம் தனிச்சுவையை கொண்டுள்ளது. இது நல்ல மணமாகவும் இருக்கும். ஆரஞ்சு மற்றும் பம்பளிமாஸ் பழம் இரண்டின் சுவையையும் இது கொண்டிருக்கும். இந்தப் பழத்தில் சோடியம் குளூட்டன் கொழுப்பு போன்ற எதுவும் கிடையாது. வைட்டமின் சி நிறைந்துள்ள இந்தப் பழம் அசாம். கேரளா. பெங்களூரு போன்ற பகுதிகளில் பரவலாக பயிரிடப்படுகிறது. பல ஊட்டச்சத்து நன்மைகளைக் கொண்டுள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் பெரிய பங்கு வகிக்கிறது. மேலும் அடிவயிறு பெருத்து காணப்படுபவர்கள் இந்த பழத்தை தினமும் உண்டு வந்தால் வயிற்றுப் பகுதியில் உள்ள தொப்பை கரைந்து உடல் எடையும் குறையும்.

4. பேரிக்காய்: இது நார்ச்சத்து நிரம்பிய பழமாகும். மேலும் குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை சரியாக வைத்து உடல் எடையையும் குறைக்கிறது.

5. அவகோடா: அவகோடா பழத்தில் நல்ல கொழுப்புகளும் நார்ச்சத்தும் நிரம்பி உள்ளன. இவற்றை உட்கொண்டால் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால் வேறு உணவை உண்ணத் தோன்றாது. நொறுக்குத் தீனிகளை மனம் நாடாது. அதனால் உடல் எடை நன்றாக குறைகிறது.

6. தர்பூசணிப் பழம்: நீர்ச்சத்து நிரம்பிய இந்த பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளன. இந்த பழத்தை உண்டால் புத்துணர்ச்சியும் வயிறு நிரம்பிய உணர்வையும் தரும் நன்றாக உடல் எடையும் குறையும்.

புதூர் மலைக் கிராமத்திலிருந்து புளிச்சாறு ஏற்றுமதி!

அமேசானின் புதிய Fire TV Stick 4K இந்தியாவில் அறிமுகம்!

ஆடுகளுக்கு கோடை காலத் தீவனமாகும் சீமைக் கருவேலக் காய்கள்!

முதுகுத் தண்டுவட பிரச்னைகளைத் தீர்க்கும் பிரண்டை!

ரீல் மருமகளை ரியல் மருமகளாக்கிய மெட்டி ஒலி சாந்தி!

SCROLL FOR NEXT