Do you know which are the world class foods that give health to the body? https://www.goodhousekeeping.com
ஆரோக்கியம்

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உலகத்தரம் வாய்ந்த உணவுகள் எவை தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

லகின் பலதரப்பட்ட மக்களால் அதிகளவு ஆரோக்கியம் நிறைந்ததாகக் கருதப்பட்டு அடிக்கடி உட்கொள்ளப்படும் உணவு வகைகள் சிலவற்றைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

க்ரூஸிஃபெரஸ் வகையை சேர்ந்த காய்கறியான புரோக்கோலி அதிகளவு ஆன்டி ஆக்சிடன்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின் C மற்றும் K நிறைந்தது. இச்சத்துக்கள் புற்றுநோய் தாக்கும் அபாயத்தைத் தடுக்கும்; உடலிலுள்ள நச்சுக்களை நீக்க உதவும்; உடலின் முழு ஆரோக்கியம் காக்கவும் பயன்படும்.

புரோட்டீன், கால்சியம், ப்ரோபயோட்டிக்ஸ் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த க்ரீக் யோகர்ட் ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவுவதோடு, எலும்புகளை பலப்படுத்தவும் செய்கிறது.

இதயத்துக்கு ஆரோக்கியம் தரக்கூடிய மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், நார்ச்சத்து, வைட்டமின் B, E மற்றும் K ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்தது அவகோடா. இரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் குணம் கொண்ட பொட்டாசியமும் இந்தப் பழத்தில் உள்ளது.

பீன்ஸ், பீஸ், கொண்டைக்கடலை போன்ற பயறு மற்றும் பருப்பு வகைகளில் அதிகளவு புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை இதய ஆரோக்கியத்திற்கும், இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும், எடைப் பராமரிப்பிற்கும் உதவுகின்றன.

குயினோவா, ஓட்ஸ், பிரவுன் ரைஸ் மற்றும் பார்லி ஆகிய முழு தானிய வகைகளில் அதிகளவு நார்ச்சத்து, வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை செரிமானம் நல்ல முறையில் நடைபெற உதவுகின்றன; இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்கவும் செய்கின்றன.

பாதாம், வால்நட், சியா மற்றும் ஃபிளாக்ஸ் விதைகளில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியம் தரும் கொழுப்பு வகைகள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

இவை இதய நோய் வரும் ஆபத்தைக் குறைத்து, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்பட உதவி புரிகின்றன.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த மீன் வகைகள் இதய ஆரோக்கியம் காக்கவும் மூளையின் செயல்பாடுகள் சிறக்கவும் உதவுகின்றன. குறிப்பாக, சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மட்டுமின்றி, உயர் ரக புரோட்டீன், செலீனியம் மற்றும் வைட்டமின் D, B12 ஆகிய சத்துக்களும் நிறைந்துள்ளன.

ப்ளூபெரி, ஸ்ட்ராபெரி, ராஸ்பெரி போன்ற பெரி வகைப் பழங்களில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, இதய நோய் மற்றும் கேன்சர் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயத்தைத் தடுக்க உதவுகின்றன. பசலை, காலே, சுவிஸ் சார்ட் போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக, இரும்புச் சத்து, ஃபொலேட், வைட்டமின் A, C, K ஆகியவற்றைக் கூறலாம். மேலும் இவை குறைந்த கலோரி அளவு கொண்டு அதிக நன்மைகள் தரக்கூடியவை.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT