Do you know which vegetables and fruits can help you get clear vision?
Do you know which vegetables and fruits can help you get clear vision? https://sanjeevan.in
ஆரோக்கியம்

பளிச் பார்வை பெற உதவும் காய் கனிகள் எவை தெரியுமா?

மகாலட்சுமி சுப்பிரமணியன்

ல்லாவிதமான காய்கறிகள், கனி வகைகளில் சத்துக்கள் பல அடங்கி இருந்தாலும் கூடுதலாக சில வகை காய் கனிகள் உடலுக்கு, குறிப்பாக கண்ணுக்கும், பார்வைத் திறனுக்கும் ‌பெரிதும் நலம் பயப்பவையாக உள்ளன. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

வைலட் ரோஸ் டீ: கண்கள் சுருங்கி விரியும்போது தேவைப்படும் நெகிழ்ச்சியைத் தரும் சத்துக்கள், அதாவது வைட்டமின் ஏ, பி, பி2, சி, கே, ஈ, இரும்புச் சத்து, மாங்கனீசு, சோடியம், கால்சியம் அனைத்தும் இதில் நிறைந்துள்ளன.

கொத்தமல்லி இலைகள்: கண்களில் படும் தூசியினால் ஏற்படும் பாதிப்பைப் போக்க வைட்டமின் சத்துக்கள் நிறைந்த இந்த கொத்தமல்லி இலை பார்வை திறனுக்கு பலவித பலன்களைத் தருகிறது.

கேரட்: நம் அனைவருக்கும் தெரிந்த கேரட்டின் பலவித நன்மைகளோடு கண் பார்வைக்கும், பளபளப்பிற்கும் பெரிதும் உதவுகிறது. கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ பீட்டா கரோட்டின் கண் பார்வையை சீராக வைக்க உதவுகிறது.

புரோக்கோலி: கண்களில் படும் அதிக வெளிச்சம் மற்றும் கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தினால் ஏற்படும் பார்வைக் கோளாறுகளை இது சரிசெய்கிறது.

மீன் உணவுகள்: மீன்களில் குறிப்பாக காலா மீன், கெளுத்தி மீன் இவை வயதான பின்னர் ஏற்படும் பார்வைப் பிரச்னைகளை சரிசெய்யும்.

அவகோடா: கண் பார்வைத் திறனை அதிகரிக்கத் தேவையான அனைத்து சத்துக்களும் இதில் அடங்கியுள்ளன.

பெர்லிஸ்: இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ரோடாப்ஸின் சத்துக்கள் உடம்பில் புது செல்களை உருவாக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து கண் பார்வையை மேம்படுத்துகிறது.

ஐ வாஷ்: ஒரு கப்பில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு அந்த நீர் வெளியே வழியாதவாறு கண்களை அந்த கப்பில் உள்ள தண்ணீரில் வைத்து, கண்களை சுழற்றி கழுவி வர கண்களில் உள்ள மாசு, தொற்றுக்களை அகற்றும்.

வேலைகளுக்கு இடையே கண்களை சில நிமிடங்கள் மூடி பின் திறக்கலாம். கைகளில் உள்ள அகுபிரஷர் புள்ளிகளை கண்டறிந்து பயிற்சி செய்ய கண் பார்வை கூர்மையாகும். இது தவிர, சமச்சீரான உணவுப் பழக்கங்கள், மூச்சுப் பயிற்சி, சூரிய நமஸ்காரம் போன்றவை பார்வைத் திறனை அதிகரிக்க உதவும்.

இரவில் ஒளிரும் அதிசயத் தாவரங்கள்!

Brazilian Treehopper: மண்டை மேல கொண்டை வச்சிருக்கானே எவன்டா இவன்? 

ஏர்ல் கிரேய் டீயிலிருக்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்!

எமனை உயிர்ப்பிக்க பூமாதேவி வழிபட்ட தலம் எது தெரியுமா?

Surrounded by Idiots புத்தகம் கற்றுத்தந்த வாழ்க்கை பாடங்கள்! 

SCROLL FOR NEXT