பேரிக்காய் 
ஆரோக்கியம்

ஆப்பிள் பழத்தின் ‘அக்ளி சித்தி’ யார் என்று உங்களுக்குத் தெரியுமா?

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ப்பிள் பழத்தின் ‘அக்ளி சித்தி’ என்று அழைக்கப்படும் பேரிக்காய் மற்றும் ஆப்பிள் பழங்களில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் அளவு ஒரே அளவில்தான் உள்ளன. பேரிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் ஏராளமாக உள்ளன. நார்ச்சத்து மிக்க கொலஸ்ட்ரால் இல்லாத பழம் இது. இதில் குறைந்த அளவு கலோரிகளே உள்ளன. அத்துடன் இவை உண்ணும் உணவில் உள்ள கொழுப்பை வயிற்றில் சேராமல் தடுக்கும்.

பேரிக்காயின் சதையில் கடினமான செல்கள் உள்ளன. இவை ஆப்பிள்களிலிருந்து வேறுபடுகின்றது. இந்த கடினமான செல்கள், ‘கிரிட்’ அல்லது ‘ஸ்டோன் செல்கள்’ என அழைக்கப்படுகின்றன. முதிர்ந்த பேரிக்காய்கள் மிகவும் இனிப்பாக இருக்கும். பச்சை பேரிக்காய்களைக் கடித்தால் புத்துணர்ச்சியூட்டும் சுண்ணாம்பு போன்ற ஒரு லேசான சுவையைக் கொடுக்கும்.

சில பேரிக்காய்களின் மையத்தில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் இவை கடிக்கும்போது ஒரு இனிப்பு சுவையான சாறு வெளியேறும். பேரிக்காயில் கால்சியம், பாஸ்பரஸ் கணிசமான அளவு உள்ளதால் இவை எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. பேரிக்காய் சாப்பிடுவதால் எலும்புகள், பற்கள் பலப்படும். இதயம் வலுவாகும். இரைப்பை, குடல் மற்றும் ஜீரண உறுப்புகளை பலமாக்கும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு.

பேரிக்காயின் தோலில் உள்ள துவர்ப்பு தன்மைதான் இதன் பெரிய பலமே. பேரிக்காயை தோலுடன் சாப்பிடும் போது அவை இதய நோயை கட்டுப்படுத்துகிறது. சிலருக்கு பசி எடுக்காது. இவர்கள் பேரிக்காய்களை தொடர்ந்து நான்கு நாட்கள் எடுத்துக்கொள்ள  நல்ல பசியை உண்டுபண்ணும்.

சிறுநீரகக் குறைபாடு உள்ளவர்களுக்கு பேரிக்காய் சிறந்த உணவு. இது சிறுநீரை வெளியேற்றவும், பலவீனமான சிறுநீரக செயல்பாட்டை சரி செய்யவும் உதவுகிறது. அதிகப்படியான யூரிக்  அமிலத்தை உடலிலிருந்து வெளியேற்றும் ஆற்றல் பேரிக்காய்க்கு உண்டு. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால் டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கின்றது.

பேரிக்காயில் பெக்டின் உள்ளதால் குடல் புற்றுநோய் திசுக்கள் வளராது காக்கும் ஆற்றல் கொண்டது. பேரிக்காய் கொண்டு மிகவும் சுவையான சாலட் செய்து சுவைக்கலாம். பேரிக்காய் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இது இரத்த சக்கரை அளவை குறைக்கும். இவை வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை குறைக்க உதவுவதால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

பேரிக்காய் அதன் கடினத் தன்மையால் ஜீரணிக்க நேரம் எடுத்துக்கொள்ளும். இதை நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு என்று எடுத்துக் கொள்ளலாம். அதிகம் எடுத்துக் கொண்டால் சிலருக்கு வாய்வு பிரச்னை ஏற்படலாம்.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT