Do you often apply kajal on your eyes? Be careful! Image Credits: India.Com
ஆரோக்கியம்

கண்களுக்கு அடிக்கடி காஜல் போடுவீர்களா? உஷார்!

நான்சி மலர்

‘கண்ணுக்கு மை அழகு’ என்று சொல்வதுண்டு. பெண்களுக்கு கண்களில் மையிடவது மிகவும் பிடிக்கும். ஆனால், தற்போது சந்தையில் இருக்கும் காஜல் போன்ற ரசாயன பொருட்கள் கலந்த மையை வாங்கிப் பயன்படுத்தும்போது அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். அதைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

இயற்கையாக வீட்டிலேயே தயாரிக்கப்படும் மை சுத்தமாக இருக்கும். இதை பயன்படுத்துவதால், பெரிதும் கண்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது. ஆனால், ரசாயனம் கலந்த காஜல் போன்ற மைகளை தினமும் கண்ணுக்கு போடுவதால், பக்கவிளைவுகள் ஏற்படுகிறது. அதிலும் விலை மலிவான பொருட்களை பயன்படுத்தும் போது அதிக பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் கண்களில் எரிச்சல், கண்கள் சிவப்பது, கண்களில் ஏற்படும் அசௌகரியம் ஆகியவை வரத்தொடங்கும்.

விலை மலிவான காஜலை வாங்கிப் பயன்படுத்துவதால், அது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தக்கூடும். அதிகமாக பயன்படுத்துவதன் காரணமாக அரிப்பு, வீக்கம், கண்களை சுற்றி தடிப்புகள் வரக்கூடும்.

காஜல் பென்சில் தூய்மையானதாக இல்லையென்றால், பேக்டீரியா பூஞ்சை போன்ற கிருமிகளால் பாதிப்பு ஏற்பட்டு Conjunctivitis என்னும் நோய் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

காஜலை கண்களுக்கு உள்ளே Waterline என்று சொல்லப்படும் இடத்தில் பெண்கள் அதிகமாக போடுவார்கள். கண்களுக்குள் இருக்கும் Eye lashes உள்ளே Meibomian gland என்ற சுரபி இருக்கும். அதனுடைய வேலை என்னவென்றால், எண்ணெய்யை உற்பத்தி செய்து கண்களை ஈரப்பதமாக வைத்துக்கொள்வதேயாகும்.

காஜலை தினமும் கண்களுக்குள் இவ்வாறு போடும்போது Meibomian gland இல் சுரக்கப்படும் லிப்பிட்ஸ் தேக்க நிலையை அடைந்து அந்த இடத்தில் கட்டி உருவாக வாய்ப்பிருக்கிறது. இதனால் நோய் தொற்று உருவாகி சில அரிதான சமயங்களில் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய நிலை உருவாகலாம். அதனால், காஜலை அதிகமாக பெண்கள் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வது நல்லது. முக்கியமாக குழந்தைகளிடம் ரசாயனம் அதிகம் இருக்கும் காஜலை பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறந்தது.

இந்த பிரச்னைகளை போக்க தரமான கண் மைகளை பயன்படுத்துவது ஆரோக்கியமானது. இல்லையேல் இயற்கையாக வீட்டிலேயே செய்யக்கூடிய மையை உபயோகிப்பது சிறந்தது. நம்முடைய கண்களை பாதுகாக்க காஜலை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது, தூங்குவதற்கு முன் கண்களை சுத்தமாக கழுவிவிட்டு தூங்க வேண்டும், கண்களில் தொடர்ந்து காஜல் பயன்படுத்துவதை அவ்வப்போது குறைத்துக் கொள்வது நல்லது.

தஞ்சை பெருவுடையார் கோயிலின் 10 ஆச்சரியத் தகவல்கள்!

இந்த 6 அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் இருந்தால் ஜாக்கிரதை!  

11 வாரம் 11 சுற்று பிரதட்சிணம் செய்ய தோஷம் நீக்கி அருளும் சனி பகவான்!

மறந்துபோன இந்த கீரைகளின் மகத்துவம் தெரியுமா?

குள்ள நீர்யானைக் குட்டியும், அரிய வகை டைனோசர் இனமும்! 

SCROLL FOR NEXT