ஆரோக்கியம்

பாதங்களை பராமரியுங்கள்; புறக்கணிக்காதீர்கள்!

ஜெ.ராகவன்

டலின் அஸ்திவாரமாக இருப்பது பாதங்கள்தான். ஆனால், பெரும்பாலும் அவைதான் புறக்கணிக்கப்படும் உடல் பகுதியாகும். வழக்கமாக நாம் உடலின் மற்ற பகுதிகளை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம். ஆனால், கால் பாதங்களை அதிகம் கவனிக்காமல் விட்டு விடுகிறோம். பாதங்களை சரியான முறையில் பராமரிக்காவிட்டால் பூஞ்சை தொற்று, பாக்டீரியா, வீக்கம், வலி, தோல் வெடிப்பு, பாதம் கருத்துப் போதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

தினசரி கால்களை பராமரிக்கும் வழக்கத்தை மேற்கொள்வதன் மூலம் பாதங்களில் ஏற்படும் சிக்கல்களை எளிதாக சரி செய்யலாம். பொதுவாக, நாம் பல் துலக்காமல் ஒரு நாள்கூட இருக்க மாட்டோம். அதேபோல, கால்களையும் தினமும் கவனித்து பராமரிக்க வேண்டும். கால்களில் வெட்டுக்கள், புண்கள், வீக்கம் ஏதாவது உள்ளதா என்று தினசரி சரிபார்க்க வேண்டும். நகங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

தினமும் கால்களை வெதுவெதுப்பான நீரில் கழுவுவது நல்லது. கால்கள் வறண்டுபோகாமல் இருக்க லோஷன், கிரீம் அல்லது பெட்ரோலியம் ஜெல்லியை கால்களில் தடவி அவற்றை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும். விரல் இடுக்குகளில் அழுக்கு படியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கால்கள் எப்போதும் உலர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.

வாழைப்பழத்தை மிக்ஸியில் அடித்து கிடைக்கும் பேஸ்டை கால்களில் தடவி 15 நிமிடங்கள் ஊறிய பின் வெதுவெதுப்பான நீரில் காலை கழுவினால் கால்கள் மிருதுவாக இருக்கும். கால்களை நன்றாக சோப்பு போட்டு கழுவும்போது விரல் நகங்களில் உள்ள அழுக்குகளை சுத்தம் செய்யலாம். நீங்கள் நீண்ட நேரம் காலணி அணிபவராக இருந்தால் வீட்டுக்கு வந்த பின் சோப்பு போட்டு கழுவி, கிருமி நாசினி திரவத்தை நான்கு சொட்டு விட்டு துடைத்தால் பாதங்களில் பாக்டீரியா தொல்லை ஏற்படாது.

வெதுவெதுப்பான நீர் நிறைந்த பெரிய பாத்திரத்தில் ஷாம்பூ உப்பு மற்றும் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை விட்டு அந்த தண்ணீரில் சில நிமிடங்கள் பாதங்களை அமிழ்த்தி வைத்து ப்யூமிக் கல்லால் தேய்க்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரால் கழுவி நன்றாகத் துடைத்து விடவும்.

சிறிது கற்றாழை ஜெல்லுடன் கடலை மாவைக் கலந்து மிக்ஸியில் அரைத்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உள்ளங்கால் பாதம், கணுக்கால் முழுவதும் தேய்த்துக் கழுவி வந்தால் காயத்தால் ஏற்பட்ட தழும்புகள், கருமை மறைந்து சருமம் இயல்பான நிறத்துக்கு மாறும். நான்கு துளி விளக்கெண்ணெயை உள்ளங்கையில் எடுத்துக்கொண்டு நன்றாக சூடு பறக்க இரண்டு பாதங்களிலும் தேய்த்து வர, பாதம் மினுமினுப்பாக மாறும்.

உங்கள் பாதங்களை மென்மையாக்க உதவும் லோஷன் அல்லது எண்ணெயைத் தடவவும். காயம் அல்லது புண் பகுதிகளில் ஒருபோதும் பியூமிக் கல்லைப் பயன்படுத்த வேண்டாம். எந்த சூழ்நிலையிலும் வெறுங்காலுடன் நடக்காதீர்கள். செருப்பு அணிந்துகொண்டே வெளியில் செல்லுங்கள்.

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

12 ரோபோக்களைப் பேசி மயக்கி கடத்திய ரோபோ… திட்டம் போட்டு செய்த சம்பவம்… கிரிமினலாக மாறிய ஏஐ!

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

SCROLL FOR NEXT