Eating too much dry fruits is not good; Do you know why? https://www.indiamart.com
ஆரோக்கியம்

உலர் பழங்களை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல; ஏன் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

லர் பழங்களான (Dry Fruits) பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், கிரேன்பெர்ரி, ஆப்ரிகாட், ப்ளூபெர்ரி, பேரிச்சை போன்றவை உடலுக்கு மிகுந்த நன்மை பயப்பவை என்பதில் சந்தேகம் இல்லை. உலர் பழங்களில் இரும்புச்சத்து, புரதம், மெக்னீசியம், நல்ல கொழுப்பு, வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து உள்ளன.

ஆனால், அவற்றை அதிகமாக உண்ணும்போது உடல் வெப்பம் அதிகரித்து முகத்தில் பருக்கள் மற்றும் தேவையில்லாத சரும தொந்தரவுகள் தோன்றக்கூடும். ஒரு நாளைக்கு இரண்டு டேபிள் ஸ்பூனுக்கு மிகாமல் மட்டுமே அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது சில பக்க விளைவுகளை ஏற்படுத்திவிடும். அவற்றைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. உடல் எடை கூடுதல்: ஆராய்ச்சி முடிவுகளின்படி ஒரு பவுண்டு உடல் எடை கூட வேண்டுமானால் 3500 கலோரி நம் உடம்பில் சேர்ந்தால்தான் அது சாத்தியம் என்கிறார்கள். ஆனால், தினமும் உலர் பழங்களை இரண்டு ஸ்பூனுக்கு மேல் எடுத்துக் கொண்டு வந்தால் ஒரே மாதத்தில் இரண்டு பவுண்டு எடை கூடும். இதனால் உடல் பருமன் கூடுதல், மகளிர்க்கு மாத விலக்கில் தொந்தரவுகள் போன்றவை தோன்றக்கூடும்.

2. ஆஸ்துமா பிரச்னை: உலர் பழங்களைக் கெடாமல் பாதுகாப்பதற்கு சல்பர் டைஆக்சைடு உபயோகிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 20 மில்லி கிராமுக்கு மேல் சல்பர் டையாக்சைடு மனிதர்கள் உட்கொள்ளக்கூடாது. அப்படி இருந்தால் அவர்களுக்கு ஆஸ்துமா, சரும சம்பந்தமான வியாதிகள் மற்றும் அலர்ஜிகள் தோன்றக்கூடும்.

3. வயிறு சம்பந்தமான கோளாறுகள்: நார்ச்சத்து உள்ள உலர் பழங்களை தினமும் உட்கொள்ளும்போது அது இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன் குடல் இயக்கத்திற்கும் நன்மை பயக்கிறது. ஆனால், அதன் அளவு அதிகமானால் வயிறு வீங்குதல், கனமாக இருத்தல், வயிற்றுப்போக்கு, கிராம்ப்ஸ் எனப்படும் தசைப்பிடிப்பு மற்றும் மலச்சிக்கல் போன்றவை வரும்.

4. பற்களுக்குக் கேடு: உலர் பழங்களை தினமும் உண்ணும்போது அவற்றில் உள்ள சர்க்கரை பற்களுக்கு கேடு விளைவிக்கும். பல் ஆரோக்கியம் கெட்டுப்போகும். பற்குழிகள், சொத்தைப் பற்கள் தோன்றும்.

5. சர்க்கரை, உயர் இரத்த அழுத்தம்: உலர் பழங்களில் உள்ள அதிக அளவு கிளைசெமிக் இன்டெக்ஸ மிக விரைவில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்யும். எனவே, உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களும் சர்க்கரை நோயாளிகளும் உலர் பழங்களை குறைவாகவே எடுத்துக்கொள்ள வேண்டும்.

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

SCROLL FOR NEXT