Eight Super Foods to Eat to Prevent Brain Tumors
Eight Super Foods to Eat to Prevent Brain Tumors https://www.maxlab.co.in
ஆரோக்கியம்

மூளைக் கட்டி வராமல் தடுக்க உண்ண வேண்டிய எட்டு சூப்பர் உணவுகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

பொதுவாக, நம் உடலுக்குள் எந்த நேரமும் எந்த  மாதிரியான வியாதிகளும் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பது உண்மை. ஒரு நோய் வந்த பின் அதைக் குணப்படுத்துவதை விட, அது வராமல் தடுப்பதே நலம் என்று ஓர் ஆங்கிலப் பழமொழி கூறுகிறது. உடலின் மற்ற பாகங்களில் வரும் நோய்களை விட மூளைக்குள் ஏதாவது பிரச்னை என்றால் அதைக் குணப்படுத்துவது ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. மூளைக்குள் கட்டி (Brain Tumor) என்ற அபாயகரமான நோய் வருவதைத் தடுக்க நாம் உண்ண வேண்டிய எட்டு வகை சூப்பர் உணவுகள் உள்ளன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கிய ஸ்ட்ரா பெரி, ப்ளூ பெரி, ராஸ் பெரி, பிளாக் பெரி போன்ற பெரி வகைப் பழங்கள்.

லைக்கோபீன் என்றொரு கூட்டுப்பொருள் தக்காளியில்  மிக அதிகம் உள்ளது. இது உடலில் கட்டிகளும் கேன்சரும் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

காலிஃபிளவர், புரோக்கோலி, பிரஸ்ஸல் ஸ்பிரௌட் போன்ற க்ரூஸிஃபெரஸ் காய்கறிகள் உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியம் காக்க மிக அதிக அளவில் உதவி புரிபவை.

மூளை ஆரோக்கியத்தை அதிகளவு மேம்படுத்தவும், ஒட்டுமொத்த உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும் உதவக் கூடியது மஞ்சள் என்ற மசாலாப் பொருள்.

பீன்ஸ் காயானது உடலில் கட்டிகளும் கேன்சரும் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளதோடு, ஏற்கெனவே கேன்சர் நோயாளியாயிருந்து குணமான ஒருவருக்கு மீண்டும் அந்நோய்த் தாக்குதல் வராமலிருக்கவும் பாதுகாப்பளிக்கிறது.

மூளைக்குள் கேன்சர் செல் வளர்வதைத் தடுத்து நிறுத்தி அவற்றை அழிக்கக்கூடிய வல்லமை கொண்டது ஃபிளாக்ஸ் விதைகள் (Flax seeds).

பாதாம், வால் நட், பிஸ்தா போன்ற தாவர விதைக் கொட்டைகள் மூளையில் கேன்சர் கட்டிகள் உருவாகும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தக்கூடியவை. மேலும் மூளையில் உண்டாகும் வேறு எந்தவிதமான கோளாறுகளுக்கும் தீர்வு அளிக்கும் வல்லமையும் கொண்டவை இவை.

மூளை உள்பட, உடலின் எந்த பகுதியிலும் உற்பத்தியாகும் கேன்சர் செல்களை முற்றிலும் அழிக்கக்கூடிய சக்தி பூண்டில் உள்ள அல்லிசின் (Allicin) என்ற பொருளுக்கு உண்டு.

மேற்கூறிய உணவுகளைத் தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் உணவுடன் சேர்த்து உட்கொண்டு நம் மூளை மற்றும் உடலின் ஆரோக்கியம் காப்போம்.

சிறுகதை - முகம் மாறு தோற்றப் பிழை!

Paitkar Painting: ஜார்க்கண்டின் பாரம்பரிய ஓவியமான பைட்கர் ஓவியத்தின் சுவாரசியங்கள்!

வெற்றியைத் தடுக்கும் பயத்தை உதறித் தள்ளுங்கள்!

சிறுகதை - விடுகதை!

இந்தியாவின் ஐஸ்கிரீம் மேன் யார் தெரியுமா?

SCROLL FOR NEXT