Exercises to help relieve back pain 
ஆரோக்கியம்

முதியவர்களின் முதுகு வலியைப் போக்க உதவும் பயிற்சிகள்!

கிரி கணபதி

வயதான காலத்தில் பலர் அவதிப்படும் பிரச்சனைகளில் ஒன்றுதான் முதுகு வலி. இது ஒருவரின் அன்றாட வாழ்க்கையை கடினமாக்கி, மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். இதற்கு சில மருத்துவ முறைகள் இருந்தாலும், சரியான பயிற்சிகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைப் பின்பற்றி முதுகு வலியை குறைக்க முடியும். இந்தப் பதிவில் முதியவர்கள் முதுகு வலியைப் போக்க உதவும் சில பயிற்சிகள் பற்றி பார்க்கலாம். 

முதுகு வலி ஏன் ஏற்படுகிறது? 

முதுகு வலி பல காரணங்களால் ஏற்படும் வாய்ப்புள்ளது. வயதான காலத்தில் முதுகு எலும்புகள், இணைப்பு தீசுக்கள் பலவீனம் அடைவதால் முதுகு வலி ஏற்படலாம். சிலருக்கு முதுகு தசைகள் பலவீனமாகி முதுகு எலும்புகளுக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். 

நீண்ட நேரம் ஒரே நிலையில் அமர்ந்திருப்பது அல்லது தவறான தோரணையில் தூங்குவது முதுகு வலியை ஏற்படுத்தும். சிலருக்கு முதுகு பகுதியில் அடிபட்டு காயங்கள் ஏற்பட்டால் வலி உண்டாகும். அதிக எடையை தூக்கும்போது முதுகெலும்பு அதிக அழுத்தத்தை சந்தித்து வலி உண்டாகும் வாய்ப்புள்ளது. 

முதுகு வலிக்கு ஏற்ற பயிற்சிகள்: 

நடைப்பயிற்சி - நடைப்பயிற்சி முதுகு வலிக்கு ஒரு எளிய பயனுள்ள பயிற்சியாகும். இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து முதுகு தசைகள் வலுப்பட உதவும். 

யோகா - யோகா என்பது பலவிதமான தோரணைகளை உள்ளடக்கிய ஒரு பயிற்சி. இது முதுகுக்கு நெகழ்வுத் தன்மையை அதிகரித்து, முதுகு வலி குறைய உதவும்.

நீச்சல் - நீச்சல் என்பது ஒரு முழு உடல் பயிற்சி. இதில் முழு உடலும் வலுவாகி, முதுகு வலி விரைவில் காணாமல் போகும்.

தரை உடற்பயிற்சிகள் - தரை, கட்டில் அல்லது நாற்காலியில் செய்யக்கூடிய சில எளிதான உடற்பயிற்சிகள் மூலமாகவும் முதுகு வலியை சரி செய்யலாம். 

பிளாங்க் - இது மிகவும் பிரபலமான உடற்பயிற்சி. இந்த பயிற்சி செய்வதால் உங்களது முதுகுத்தண்டு வலுவடைந்து, விரைவில் முதுகு வலி குணமடையும். 

மேலே குறிப்பிட்ட பயிற்சிகளை நீங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டு முயற்சிப்பது நல்லது. எடுத்த உடனேயே எந்த உடற்பயிற்சியையும் தீவிரமாக செய்ய வேண்டாம். உடற்பயிற்சிகளை எவ்வாறு முறையாக செய்வது என்பதை ஒரு பயிற்சியாளரிடம் கற்றுக்கொள்வது நல்லது. பயிற்சி செய்யும்போது வலி அதிகரித்தால், உடனடியாக நிறுத்தி விட வேண்டும். வாரத்தில் குறைந்தது மூன்று முதல் நான்கு நாட்கள் தொடர்ச்சியாக பயிற்சி செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். 

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT