Foods that provide natural nutrition for bones https://www.youtube.com
ஆரோக்கியம்

எலும்புகளுக்கு இயற்கையான ஊட்டச்சத்து தரும் உணவுகள்!

ஜெயகாந்தி மகாதேவன்

ம் உடம்பிலுள்ள எலும்புகளின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடிய ஊட்டச் சத்துக்களில் கால்சியம் முதன்மையானதாக விளங்குகிறது. இயற்கையான (Oganic) முறையில் எலும்புகளுக்கு அதிக வலுவளிக்கும் கால்சியம் சத்தைப் பெற நாம் உண்ணவேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

காலே, கொல்லார்ட் க்ரீன்ஸ் மற்றும் பசலைக் கீரை ஆகிய தாவரக் கீரைகளில் அதிகளவு கால்சியம் அடங்கியுள்ளது. டோஃபு, டெம்பே போன்ற சோயா பீன்களிலிருந்து தயாரிக்கப்படும் தாவர அடிப்படையிலான உணவுப் பொருள்கள் அதிகளவு கால்சியமும் புரத சத்தும் கொண்டவை.

பாதாம் பருப்பில் பல வகையான பிற ஊட்டச் சத்துக்களுடன் கால்சியமும் அடங்கியுள்ளது. நாம் உண்ணும் சாலட்கள் மீது தூவியும் மற்றும் பிற உணவுகளுடன் சேர்த்து சமைத்தும் எள்ளை உண்ணும்போது உடலுக்குத் தேவையான கால்சியம் சத்து கிடைக்கிறது.

இனிப்பு சுவை கொண்ட உலர் அத்திப் பழங்களை சாப்பிடும்போது உடலுக்கு வேண்டிய கால்சியம் சத்தும் நார்ச் சத்துக்களும் கிடைக்கின்றன. எடமாம் (Edamame) எனப்படும் உப்பு சேர்த்து வேக வைத்த சோயா பீன்களில் கால்சியமும் புரதச் சத்துக்களும் நிறைந்துள்ளன.

சிட்ரஸ் பழமாகிய ஆரஞ்சில் வைட்டமின் C யுடன் கால்சியமும் அதிகளவில் அடங்கியுள்ளது. சியா விதைகளை யோகர்ட் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்து உண்ணும்போது கால்சியமும் ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் கிடைக்கின்றன.

மேலே குறிப்பிட்ட உணவு வகைகளை அடிக்கடி உட்கொண்டு எலும்புகளின் ஆரோக்கியம் குறையாமல் வாழ்வோம்.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT