Foods to Eat and Avoid for People with PCOS/PCOD! 
ஆரோக்கியம்

PCOS/PCOD உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள்! 

கிரி கணபதி

பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம்/டிசிஸ் (PCOS/PCOD)  என்பது இனப்பெருக்க ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக ஏற்படும் ஒரு பொதுவான ஹார்மோன் கோளாறாகும். இது மாதவிடாய் சுழற்சி கோளாறுகள், அதிக ஆண் ஹார்மோன் மற்றும் பாலிசிஸ்டிக் ஓவேரிஸ் போன்ற பல அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இன்றுவரை இதற்கு முழுமையான சிகிச்சை இல்லை என்றாலும் உணவு முறையில் மாற்றம் செய்வதன் மூலம், இந்த நோயின் அறிகுறிகளை நிர்வகித்து அதன் தாக்கத்தைக் குறைக்கலாம். 

PCOS/PCOD உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்: 

காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் கீரைகள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருந்து கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. 

மீன், கோழி, பருப்பு வகைகள் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் போன்ற கொழுப்பு குறைந்த புரதங்கள், PCOS உள்ளவர்களுக்கு நல்லது. மேலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ், மீன் மற்றும் விதைகள், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தவும், மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும் உதவும். 

பழங்கள், காய்கறிகள் மற்றும் டார்க் சாக்லேட் போன்ற ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த உணவுகள் அழற்சியைக் குறைத்து உடல் செல்களை சேகத்தில் இருந்து பாதுகாக்க உதவும். 

PCOS/PCOD உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்: 

  • அதிக சக்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தும் என்பதால், இவற்றைத் தவிர்ப்பது நல்லது. 

  • சிவப்பு இறைச்சி, அதிக கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் வருத்த உணவுகளில் அதிக கொழுப்பு இருக்கும் என்பதால், இது ரத்த கொழுப்பின் அளவை உயர்த்தி பாதிப்புகளை அதிகரிக்கலாம். 

  • வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி மற்றும் பாஸ்தா போன்ற பதப்படுத்தப்பட்ட பொருட்களில் நார்ச்சத்து குறைவாக இருக்கும். இது ரத்த சர்க்கரை அளவை விரைவாக உயர்த்தக்கூடும். 

  • காஃபின் மற்றும் ஆல்கஹால் போன்றவையும் ரத்த சர்க்கரை அளவை பாதிக்கக்கூடும் என்பதால், இது மாதவிடாய் சுழற்சியை மேலும் மோசமாக மாற்றும். 

PCOS பிரச்சனை உள்ளவர்கள் மேலே குறிப்பிட்ட ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம், அந்த நோயின் தாக்கத்தை கணிசமாக குறைத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின், இந்த உணவுகளை எடுத்துக் கொள்வதற்கு முன், தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. 

புரதம் நிறைந்த சோயா கீமா செய்யலாம் வாங்க! 

மாதச் சம்பளம் வாங்குபவர்கள் செய்யும் 6 நிதித் தவறுகள்! 

ஆரஞ்சு Vs சாத்துக்குடி: எது சிறந்தது?

Alia bhatt beauty tips: நடிகை ஆலியா பட் அழகின் ரகசியம் இதுதான்!

6 Super Cool Facts About The Moon!

SCROLL FOR NEXT