Frozen Dessert Vs Ice cream Do you know which one is bad for health? Image Credits: The Indian Express
ஆரோக்கியம்

Frozen Dessert Vs Ice cream ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிப்பது எது தெரியுமா?

நான்சி மலர்

ஸ்கிரீம் சாப்பிடப் பிடிக்காதவர்கள் யார்தான் இருக்க முடியும்? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீமை ரசித்து, சுவைத்து சாப்பிடக்கூடியவர்கள் இருக்கிறார்கள். நாம் குளிர்ச்சியாக சாப்பிடும் அனைத்தை ஐஸ்கிரீம் என்றே இத்தனை நாட்களாக எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அவற்றிலும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. கடையில் குளிர்ச்சியாக விற்கும் அனைத்துமே ஐஸ்கிரீம் கிடையாது. அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

ஐஸ்கிரீம் என்பது பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதுவே ஃப்ரோஷன் டெசர்ட் என்பது Vegetable oilsல் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஐஸ்கிரீமில் பால் மற்றும் சில இதர தேவையானப் பொருட்களைப் பயன்படுத்தி தயாரிக்கிறார்கள். ஆனால், ஃப்ரோஷன் டெசர்ட்டில் மாவு, சர்க்கரை, Vegetable oil, gums, Artificial fillers ஆகியவற்றை சேர்த்து தயாரிக்கிறார்கள். இதில் பால் சேர்க்கப்படுவதில்லை. அதற்கு பதில் Milk solid சேர்க்கப்படும்.

ஃப்ரோஷன் டெசர்ட்டில் பாமாயில் சேக்கப்படுவதால், கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து இதயத்தை பாதிக்கக்கூடும். இதில் பால் சேர்க்கப்படவில்லை. அதற்கு பதிலாக Milk solids சேர்க்கப்படுகிறது. இதில் Oxidised cholesterol இருப்பதால் இரத்த நாளங்களை பாதித்து இதயத்தில் பிரச்னை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஃப்ரோஷன் டெசர்ட்டில் சேர்க்கப்படும் இனிப்பும் செயற்கையான Liquid glucose or inverted sugar syrup ஆகும். ஐஸ்கிரீம் மற்றும் ஃப்ரோஷன் டெசர்ட்டிற்கு நிறம் சேர்ப்பதற்காக செயற்கை நிறமூட்டியான Tartrazine பயன்படுத்தப்படுகிறது.

எனவே, ஐஸ்கிரீம் மற்றும் ஃப்ரோஷன் டெசர்டிற்கான வித்தியாசத்தை அறிந்துக்கொண்டு உண்பது மிகவும் அவசியமாகும். நிறைய கம்பெனி ஃப்ரோஷன் டெசர்ட்டை ஐஸ்கிரீம் என்று விற்கிறது. இது மக்களை ஏமாற்றும் தவறான விஷயமாகும். அடுத்த முறை ஐஸ்கிரீம் வாங்கும்போது, மறக்காமல் அதில் என்ன பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை Ingredients Label ஐ பார்த்து தெரிந்துக்கொண்டு வாங்குங்கள். மக்களுக்கு இதைப் பற்றிய போதுமான விழிப்புணர்வு இல்லை.

ஐஸ்கிரீம் என்று வாங்கி சாப்பிடும் அனைத்துமே பாலால் செய்யப்பட்டது என்று பலரும் நம்புகிறார்கள். இனி, இதைப் பற்றிய தெளிவு மக்களுக்குக் கிடைக்கும். ஐஸ்கிரீம் மற்றும் ஃப்ரோஷன் டெசர்ட் ஆகிய இரண்டிலும் அதிக சர்க்கரை மற்றும் கலோரிகள் இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். எனவே, பழங்கள் மற்றும் பழச்சாறுகளுக்கு முன்னுரிமைக் கொடுப்பது சிறந்ததாகும்.

பொடுகு பிரச்னையைப் போக்கும் 5 எண்ணெய்கள்!

ஆலய அதிசயம் - நிழல் விழும் ரகசியம்; புரியாத அதிசயம்!

மனைவியிடம் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள் எவை தெரியுமா?

இப்படி இருந்தால், அப்படி நடக்கும்… ஜாக்கிரதை!

இன்று உலகெங்கும் 'கமலா' என்பதே பேச்சு! அமெரிக்காவில் அலர்ந்த இந்த கமலம் யார்?

SCROLL FOR NEXT