Health Benefits of Kasa Kasa https://tamil.boldsky.com
ஆரோக்கியம்

கசகசாவில் உள்ள அளவற்ற ஆரோக்கியப் பயன்கள்!

எஸ்.விஜயலட்சுமி

வ்வொரு வீட்டின் அஞ்சறைப் பெட்டியிலும் தவறாமல் இருக்கும் பொருள் கசகசா. இதை உணவில் சேர்க்கும்போது சுவையும் மணமும் மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் அள்ளித் தருகிறது. கசகசாவில் பொட்டாசியம், கால்சியம், தாமிரம், மக்னீசியம் மற்றும் இரும்பு சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.

கசகசா தரும் பயன்கள்:

1. பரபரப்பான இன்றைய வாழ்க்கை சூழ்நிலையில் பலரும் மன அழுத்தம் ஸ்ட்ரெஸ் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். இவர்கள் தூக்கமின்மையாலும் அவதிப்படுகின்றனர். கசகசா இவர்களுக்கு நல்ல தீர்வாக அமைகிறது. ஒரு டம்ளர் காய்ச்சிய பாலில் சிறிதளவு கசகசாவை பேஸ்ட் போல அரைத்து சிறிதளவு நாட்டுச்சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் நன்றாகத் தூக்கம் வரும். மன அழுத்த பிரச்னையும் நீங்கும்.

2. இதில் கரையாத நார்ச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளதால் செரிமான பிரச்னைக்கு சிறந்த தீர்வினை அளிக்கின்றது. உண்ணும் உணவுகள் நன்றாக செரிமானம் ஆகி உடல் இயக்கத்தை பலப்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.

3. படிக்கும் மாணவ, மாணவியருக்கு கசகசா ஒரு நல்ல மருந்தாகும். கசகசாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளைக்கு புத்துணர்ச்சி அளித்து, நரம்பு செல்கள் வளர்ச்சிக்கும் உதவுகிறது. மாணவ, மாணவியர் கசகசாவை உண்ணும்போது அவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கிறது. அறிவுத்திறன் மேலோங்குகிறது. படித்ததும் எளிதில் மறக்காமல் இருக்கிறது.

4. எலும்புகளுக்கு நல்ல வலுவினை ஊட்டக்கூடியது கசகசா. இதில் நிறைந்துள்ள பாஸ்பரஸ் மற்றும் மாங்கனிசு எலும்பு திசுக்களை உறுதிப்படுத்துகிறது. மூட்டு வலி வராமல் காக்கிறது.

5. பெண்களை கருத்தரித்தல் பிரச்னையில் இருந்து காக்கிறது கசகசா. இது கருப்பைக் குழாயில் ஏற்படும் அடைப்புகளை அகற்றி கருப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

6. கசகசாவில் உள்ள நிறைவுறா கொழுப்புகள், இரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இது இதயத்தின் அழுத்தத்தைக் குறைத்து, மாரடைப்பு மற்றும் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.

7. கசகசா குறைந்த அளவில் உட்கொள்ளவே பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், இதிலுள்ள ஓபியேட்டு என்ற ரசாயனம் போதை தரக்கூடியது. இதனை குறைவாக எடுத்துக்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT