சாப்பிடும் உணவுகளை பற்றி அறிந்துக்கொண்டு சாப்பிட்டாலே, நம்முடைய ஆரோக்கியத்தை பாதுக்காக்க முடியும். அதாவது நாம் எடுத்துக் கொள்ளும் சிற்றுண்டி, பழங்கள், காய்கறிகள், உணவுகள் அனைத்தையும் சாப்பிடுவதற்கு முன்பே, அதில் உள்ள நன்மைகள், தீமைகளை பற்றி அறிந்துக்கொள்வது அவசியம். சுவையை மட்டும் வைத்து சாப்பிட்டால், நம் உடல் பற்றிய பாதுகாப்பு அங்கு இல்லாமல் போய்விடும்.
நம்முடைய ஆரோக்கியம் என்பது மிக முக்கியம். நம் இறுதி மூச்சு வரை நம்மோடு பயணிக்கப்போவது நம் உடல் மட்டுமே. அதனால் அதை எவ்வளவு அக்கறையுடன் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள். அந்தவகையில், பலபேருக்கு பிடித்த உணவான வேர்க்கடலையை நாம் தினமும் உட்கொள்வதன் அவசியத்தை இந்த பதிவு விளக்குக்கிறது.
வேர்க்கடலை சாப்பிட சிலருக்கு ரெம்ப பிடிக்கும். டீயுடன் சாப்பிடுவது, உணவுடன் சமைத்து சாப்பிடுவது என விதவிதமாக சாப்பிடுவர். இவ்வாறு நாம் சாப்பிடும் வேர்க்கடலையை தினமும் எடுத்துக் கொள்வது அவசியம் என கூறப்படுகிறது.
வேர்க்கடலையில் புரோட்டின், கொழுப்பு மற்றும் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவற்றை வேக வைத்தோ, வறுத்தோ அல்லது மசாலா சேர்த்து பொரித்தோ, உணவுகளோடு சேர்த்தோ எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
வேர்க்கடலை கொடுக்கும் நன்மைகள்
மனசோர்வை தடுக்கிறது
மனச்சோர்வால் பாதிக்கப்படாதவர்கள் இருக்க முடியுமா? வேர்க்கடலையில் உள்ள கிரிப்டோஃபேன், செரடோனின் என்ற மகிழ்ச்சி ஹார்மோனை வெளியிட்டு மனசோர்வை உங்களிடம் இருந்து விரட்டிவிடுமாம்.
இளமை தோற்றம் கிடைக்கிறது
இளமையாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் தினசரி வேர்க்கடலையை உட்கொள்ள வேண்டும். வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் சி சருமத்தின் உறுதி தன்மையை பராமரித்து சுருக்கங்களை தடுக்க உதவும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் இளமையுடன் இருக்கலாம்.
உடல் எடை குறைகிறது
ஒரு கையளவு வேர்க்கடலையை தினமும் சாப்ப்பிட்டால், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க முடியும். வாரத்தில் குறைந்தப்பட்சம் இரண்டு முறையாவது வேர்க்கடலை சாப்பிடுவதால், உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு.
கொலஸ்ட்ராலை குறைக்கிறது
வேர்க்கடலையில் மோனோஅன்சாச்சூரேட்டட் என்று சொல்லப்படும் கொழுப்பு அமிலங்கள் அதிலும் ஒலிக் அமிலம் இருப்பதால், அது கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரிக்க செய்யும். அதனால் தினசரி ஒரு கையளவு வேர்க்கடலையாவது சாப்பிட வேண்டும்.
புற்றுநோயை தடுக்கிறது
வேர்க்கடலையில் பாலிபீனாலிக் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் குறிப்பாக கௌமாரிக் அமிலம் இருப்பதால், இது வயிற்று புற்றுநோய் உருவாவதை தடுக்கிறது.
பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைகிறது
வேர்க்கடலையில் உள்ள ரெஸ்வெராட், நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை தூண்டுவதுடன் ரத்த நாளங்களில் மூலக்கூறு செயல்பாட்டை மாற்றி அமைக்கிறது. இதனால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைக்கிறது. எனவே தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலையை எடுத்துக் கொள்ளுங்கள்.
இவ்வாறு நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வேர்க்கடலையை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்வோம்! ஆரோக்கியமாக வாழ்வோம்! நமக்கு தெரிந்த இந்த நன்மைகளை பற்றி அனைவருக்கும் பகிர்வோம்!