ஆரோக்கியம்

சாமி கும்பிட கற்பூரம் ஏற்றுபவரா நீங்கள்? அப்படியென்றால் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்!

விஜி

ந்துக்கள் பெரும்பாலானவர்களின் வீட்டுப் பூஜை அறைகளில் கற்பூரம் அவசியம் இடம் பெற்றிருக்கும். இந்தக் கற்பூரம் சுவாமிக்கு ஆரத்தி காட்டுவதற்காகவும், திருஷ்டி சுற்றுவதற்குமே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

கற்பூரம் ஒரு நிமிடத்திற்குள் எரித்து கரைந்துவிடக்கூடியது. இதை தினசரி உபயோகப்படுத்துபவர்களும் உள்ளனர். வீட்டு பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு முன்பு இந்த கற்பூர சூடத்தை ஏற்றிக் காட்டுவதனால் வீடு முழுவதும் கற்பூர சூடத்தின் புகை சூழ்ந்து விடும். இறைவனை வழிபட கற்பூரம் பயன்படுத்தப்பட்டாலும், அது நமக்குப் பல உடல்நலப் பிரச்னைகளையும் ஏற்படுத்துகிறது. அவை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சரும எரிச்சல்: சருமத்தில் அரிப்பு, எரிச்சல், சிவந்து போகுதல் உள்ளிட்ட பிரச்னைகள் இந்த கற்பூரத்தின் புகையால் ஏற்படும் வாய்ப்புள்ளது. மிகவும் சென்சிட்டிவாக சருமமாக இருந்தால் இந்தப் பிரச்னை இன்னும் மோசமாகும்.

சுவாசப் பிரச்னை: சிலருக்கு கற்பூரத்தால் ஒவ்வாமை ஏற்படும். இதனால் அவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும். மூச்சுத் திணறல் பிரச்னை இருப்பவர்கள் கண்டிப்பாக சூடத்தின் புகையை சுவாசிக்கக்கூடாது.

வாந்தி: கற்பூரத்தை தெரியாமல் கூட வாயில் போட்டு விடாதீர்கள். இதனால் வாந்தி, வயிற்று வலி பிரச்னை உள்ளிட்டவை ஏற்படும். இதில் நச்சுத்தன்மை அதிகம் உள்ளதால் சிலருக்கு வலிப்பு நோய்கூட ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளன.

தலைவலி, தலைச்சுற்றல்: கற்பூர நீராவியின் வெளிப்பாடு அதிக தலைவலியை ஏற்படுத்தும். இதனால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

இதயப் பிரச்னைகள்: கற்பூர விஷத்தின் கடுமையான தாக்கங்கள் இதயத்தைக் கூட பாதிக்கலாம். இதன் விளைவாக அரித்மியா, குறைந்த இதயத் துடிப்பு அல்லது அதிக இதயத் துடிப்புப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT