Gym 
ஆரோக்கியம்

அதிக நேரம் உடற்பயிற்சி செய்தவர் மரணம்: ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

பாரதி

சேலத்தில் அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஜிம் உரிமையாளர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் உடற்பயிற்சி செய்து பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இதுபோல ஆண்களே உயிரிழக்கின்றனர். அதேபோல்தான் சேலத்தைச் சேர்ந்தவர் மகாதீர் முகமது என்பவர் நேற்று முன்தினம் அவரது சொந்த ஜிம்மில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்தார். அனைவரும் 7 மணி முதல் 8 மணி வரை உடற்பயிற்சி செய்து கிளம்பிவிட்டனர். ஆனால், இவர் மட்டும் தொடர்ந்து உடற்பயிற்சி செய்துக்கொண்டே இருந்தார்.

அதிக நேரம் செய்துவிட்டு குளிக்கப் போனவர் வெளியே வரவில்லை. இதனையடுத்து நீண்ட நேரம் காணவில்லை என்பதால், ட்ரைவர் உள்ளே சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினார்கள்.

ஜிம்மிற்கு செல்பவர்கள் தமது உடலுக்கேற்ற உடற்பயிற்சிகளை செய்யாமல், எடுத்தவுடன் மிகவும் கடுமையான பயிற்சிகளை செய்கின்றனர். மேலும் சிலர் குறிப்பிட்ட நேரம் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்யாமல் தோன்றும் நேரமெல்லாம் செய்கிறார்கள். இது மிகவும் தவறு. இதுபோன்ற தவறுகளால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது.

மிகவும் கடுமையான பயிற்சிகளே மாரடைப்பு ஏற்படுவதற்கு காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உடற்பயிற்சியின்போது ரத்த அழுத்தம் அதிகமாவது வழக்கம். ஆனால், உடற்பயிற்சி முடிந்தவுடன் அது குறையாமல் இருப்பதே பிரச்னையை ஏற்படுத்துகிறது.

இதய நோய்களை சரி செய்ய, இதயத்திற்கு ரத்த ஓட்டம் சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்வதுதான் ஒரே வழியாகும். இதயத்திற்கும், இதயத்திலிருந்தும் ரத்த ஓட்டம் சரியாக இருந்தால் மட்டுமே இதயம் சரியாக செயல்பட முடியும்.

இதய நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் ரத்த அழுத்தம் அதிகரிப்பு, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, ரத்த லிபிடுகள் அதிகரிப்பு, சரியான டயட்டை கடைப்பிடிக்காமல் இருப்பது, போதிய உடற்பயிற்சி இல்லாமை, புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்துதல் ஆகியவை காரணமாகும்.

ரத்த அழுத்தத்தையும் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

எவ்வளவு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

நடைப்பயிற்சி என்றால் 40 நிமிடங்கள்

ஓட்டப்பயிற்சி என்றால் 30 நிமிடங்கள்

மிதமான உடற்பயிற்சி 40 நிமிடங்கள் (வலிமையாக இருப்பவர்கள் மற்றும் நிறைய காலங்கள் ஜிம் சென்று உடற்பயிற்சி செய்பவர்கள் கூடுதலாக செய்யலாம். அதாவது 1 மணி நேரம் செய்யலாம்)

எந்தப் பயிற்சியையும் சுயமாக செய்யாமல் ஒரு பயிற்சியாளரின் உதவியோடு உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானது. மேலும் கடுமையான உடற்பயிற்சி செய்துவிட்டு உடனே சுடு தண்ணீரில் குளிப்பதை தவிருங்கள். அதேபோல் முறையான உணவு பழக்கம், தூக்கம் ஆகியவற்றை பின்பற்றுங்கள். மன அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்துக்கொள்வது நல்லது.

கணவன் மனைவி இந்த 7 விஷயங்களில் வெளிப்படையாக இருக்க வேண்டும்! 

ஆந்திரப் பிரதேசத்தின் புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய இனிப்பு ஆத்ரேயபுரம் பூதரெகுலு!

இந்த கண்ணாடி உங்களை தூங்க விடாது!

மஸ்குலர் டிஸ்டிராபியின் காரணமும் தீர்வும்!

நுரையீரலுக்கு நன்மை செய்யும் நொச்சி இலை பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT