Contact Lens 
ஆரோக்கியம்

கான்டாக்ட் லென்ஸை எப்படி பயன்படுத்துவது?

பாரதி

கண்ணாடி பயன்படுத்தும் சிலர், அவ்வப்போது கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவர். சிலர் தொடர்ந்து கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவர். அந்தவகையில், கான்டாக்ட் லென்ஸை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

கண்ணாடியில் உள்ள அதே அளவு நன்மைகள் லென்ஸிலும் உள்ளன. ஆனால், இவற்றால் தொற்றுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆகையால், அவற்றைப் பற்றி நாம் முழுமையாக தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். அதாவது, அவற்றை எப்படி பயன்படுத்துவது, பயன்படுத்தக்கூடாது போன்றவற்றைத் தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்:

கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்தும்போது கைகளில் அழுக்குகள் இருந்தால், அவை லென்ஸிலும் ஒட்டிக்கொள்ளும். அதை அப்படியே கண்களில் வைப்பது ஆபத்தானது. ஆகையால், பாதுகாப்பு வேண்டிக் கைகளை சுத்தம் செய்துக்கொள்ளுங்கள்.

லென்ஸ்களை பத்திரமாக வைக்க வேண்டும்:

வெளியே சென்றுவந்து லென்ஸை கழற்றி வைத்தாலோ? அல்லது இரவு தூங்குவதற்கு முன் கழற்றி வைத்தாலோ? வெளிபுறம் வைக்காதீர்கள். அதற்கான பாக்ஸில் வைத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக தண்ணீர் படாமல் லென்ஸை பத்திரப்படுத்துங்கள்.

வெகுநேரம் அணிய வேண்டாம்:

நீண்ட நேரம் கண்களில் லென்ஸ் அணிவது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக இரவு நேரங்களில் தூங்கும்போது லென்ஸை பயன்படுத்தவே கூடாது. லென்ஸை கழற்றி சுத்தம் செய்துவிட்டு உறங்கவும்.

லென்ஸ் பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை:

லென்ஸ்களை வீட்டில் உள்ள சோப்பு அல்லது வேறு ஏதேனும் இரசாயன பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்யாதீர்கள். கண்களுக்கு வறட்சி ஏற்படாமல் இருக்க அதற்கான சொட்டுகளை பயன்படுத்தலாம். காலாவதியான கான்டாக்ட் லென்ஸ்களை அப்புறப்படுத்திவிட வேண்டும். தெரியாமல் பயன்படுத்திவிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள்.

லென்ஸ் பயன்படுத்தும்போது என்ன செய்யக்கூடாது?

பொதுவாக மற்றொருவருடைய கண்ணாடியை கூட வாங்கி பயன்படுத்தக்கூடாது. அப்படியென்றால், மற்றொருவருடைய லென்ஸை பயன்படுத்தவே கூடாது. லென்ஸை போட்டுக்கொண்டு தூங்குவது தவறு. ஏற்கனவே பயன்படுத்திய கான்டாக்ட் லென்ஸ் கரைசலை மீண்டும் பயன்படுத்தக்கூடாது. லென்ஸில் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது. கண் சார்ந்த பராமரிப்பு பொருட்களை மாற்றுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரை கலந்தாலோசிக்க மறந்து விடாதீர்கள். அவசர தேவைக்கு கூட உங்களது கான்டாக்ட் லென்ஸை சுத்தப்படுத்தும் லிக்விடுகளை வேறு நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT