Insomnia? Don't be indifferent! https://tamil.asianetnews.com
ஆரோக்கியம்

தூக்கமின்மையா? அலட்சியம் வேண்டாம்!

கண்மணி தங்கராஜ்

தூக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். சராசரியாக ஒரு மனிதனின் தூக்க நேரம் என்பது ஒரு நாளிற்கு ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை ஆகும். தூங்கும் நேரமானது குறையக் குறைய மனிதர்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். அதிலும் குறிப்பாக இளைய தலைமுறையினர் பலருக்கும் தூக்கமின்மை பிரச்னை தற்போது அதிகம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தூக்கமின்மை பிரச்னைக்கு காரணமும் தீர்வும் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

தூக்கமின்மையின் அறிகுறிகள்: இரவு மற்றும் பகல் நேர சுழற்சி முறை மற்றும் உணவு முறையானது சரியாக இருக்கும் பட்சத்தில் மனிதனின் உடல் நலம் செழிப்போடு இருக்கும். ஆனால், இந்த சுழற்சிமுறையில் மாற்றம் நிகழும் தருவாயில்தான் உடல் பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. இரவு நேர சுழற்சி முறையைப் பொறுத்த வரையில் தூக்கம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தூக்கமின்மையின் அறிகுறிகள் என்பது 

• தூங்குவதில் சிரமம்,

• சீக்கிரமாகவே விழிப்புத் தட்டுவது,

• தூக்கம் பற்றாக்குறையால், தினமும் செய்யவேண்டிய செயல்பாட்டில் ஏற்படும் சிக்கல்கள்,

• அதிகமான கவனச்சிதறல்,

• மனநிலையில் தடுமாற்றம் மற்றும் பதற்றம்,

தூக்கமின்மைக்கான காரணம்: சாதாரணமாக ஒருவருக்கு தூக்கமின்மை என்பது ஏற்படாது. அதாவது, நிச்சயமாக தூக்கமின்மை பிரச்னை ஏற்படுவதற்கான ஒரு சில காரணங்கள் கட்டாயம் இருக்கும். அவை:

• தூங்குவதற்கு முன்பாக அதிக நேரம் கைபேசி போன்ற மின்னணு சாதனங்களைப் பயன்படுத்துவது தூக்கமின்மைக்கான முக்கிய காரணமாகும்.

• தூங்குவதற்கு ஒருசில மணி நேரத்திற்கு முன்னதாகவே இரவு நேர உணவை உட்கொள்வது கட்டாயமாகும். மேலும் இரவு நேரத்தில் காப்பி மற்றும் மது பழக்கம் தூக்கத்தை கெடுக்கும்.

• அதிகமான சத்தம், சீரற்ற வெப்பநிலை மற்றும் வெளிச்சத்தின் தொல்லைகூட ஒரு சில நேரங்களில் தூக்கத்திற்கு தடையாக இருக்கின்றன.

• நீண்டநாள் உடல் வலி, ஆஸ்துமா மற்றும் அமில ரிப்ளக்ஸ் போன்ற சில மருத்துவப் பிரச்னைகளும் தூக்கமின்மைக்கு காரணமாகும்.

• கர்ப்ப காலம் மற்றும் மாதவிடாய் நாட்களில் ஹார்மோன்கள் சமநிலையற்று ஏற்ற இறக்கத்தோடு இருப்பது வழக்கம்தான். ஆனால், இந்த ஹார்மோன் நிலை சார்ந்த மாற்றங்கள்கூட சில சமயங்களில் தூக்கமின்மைக்கு காரணமாக இருக்கக்கூடும்.

• குடும்பக் கஷ்டம், பொருளாதார ரீதியான பிரச்னைகள், மனதிற்கு நெருக்கமானவர்களின் பிரிவு, பணிச் சுமை என ஏரளாமான சமூகம் சார்ந்த மன ரீதியான பிரச்னைகள் மூலமாகவும் தூக்கமின்மை ஏற்படும்.

• சிலருக்கு மருந்து மற்றும் சிகிச்சைகள் கூட தூக்கமின்மைக்கு காரணமாக அமையும். அதாவது ஒருசில ஆண்டி டிரஸண்ட்ஸ் மற்றும் ஆஸ்துமா அல்லது உயர் இரத்த அழுத்தத்திற்கான சிகிச்சைகள் உட்பட, மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட பல மருந்துகள் கூட தூக்கத்தின் கால அளவை குறைக்கும்.

இதற்குத் தீர்வுதான் என்ன?

எல்லாவிதமான நோய்க்குமே தீர்வு என்பது உண்டு. குறிப்பாக, தூக்கமின்மையைப் பொறுத்தவரையில் மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அறிந்தாலும்கூட இயற்கையின் வழி வரும் தீர்விற்கும் செவிசாய்க்க வேண்டியது அவசியமாகும். தூக்கத்தை அதிகரிக்க உதவும் இயற்கையான உணவுப்பொருட்கள்.

வாழைப்பழம்: எளிதாகவும் மலிவாகவும் கிடைக்கும் வாழைப்பழத்தில் நிறைந்திருக்கும் கார்போஹைட்ரேட் சக்தியானது இயற்கையாகவே தூக்கத்தை வரவழைக்க உதவும். இரவில் தொடர்ந்து இந்தப் பழத்தை உண்டு வந்தால் நமது உடலுக்கு மிகவும் நல்லது.

பால்: உறங்கச் செல்வதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு மிதமான சூட்டில் பால் அருந்துவது நல்லது. மேலும் பாலில் உள்ள மெலடோனின் மற்றும் செரட்டோனின் தூக்கம் வருவதற்கு உதவியாக இருக்கும். அதுமட்டுமின்றி செரட்டோனின் மூளைக்கு அமைதியைக் கொடுத்து நமது மனநிலையை அமைதிப்படுத்தும்.

தேன்: தேனில் இருக்கும் இயற்கை சர்க்கரை இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது மூளையில் டிரிப்டோபன் மற்றும் செரட்டோனின் நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். எனவே, ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு நேர உணவில் தேனை சேர்த்துக் கொள்வது நல்லது.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT