It is the only vegetable that solves 5 major problems of the body
It is the only vegetable that solves 5 major problems of the body https://tamil.boldsky.com
ஆரோக்கியம்

உடலின் 5 முக்கியப் பிரச்னைகளுக்குத் தீர்வு தரும் ஒரே காய்கறி!

கண்மணி தங்கராஜ்

புரோக்கோலி என்னும் காய்கறியைப் பற்றி பெரும்பாலானவர்களுக்கு சரிவரத் தெரிவதே இல்லை. இந்த சத்து மிகுந்த காய்கறியை சாலையோர காய்கறிக் கடைகளில் தொடங்கி, பெரியளவிலான மார்க்கெட்களிலும் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். இது காலிஃபிளவர் போன்ற வடிவத்தில் பச்சை நிறத்தில் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இந்தக் காய்கறி மிகப்பெரிய பங்காற்றுகிறது. அந்த வகையில் இதனுடைய ஐந்து நன்மைகள் குறித்து விளக்குகிறது இந்தப் பதிவு.

1. இதயத்தின் கவசம்: புரோக்கோலியில் உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்கும் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அவசியம் இதை உணவோடு சேர்த்து சாப்பிட வேண்டும். இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். புரோக்கோலியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுவதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் தவிர்க்கிறது. இதிலுள்ள நல்ல கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் இருதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும், இதில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் நம்முடைய இதயத்தைப் பாதுகாக்கும் ஒரு கவசமாகவும் இது திகழ்கிறது.

2. புற்றுநோய்க்கான பாதுகாப்பு: புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுகளில் இது முதன்மைப் பெற்றது. புரோக்கோலியில் சல்போராபேன், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்திருக்கின்றன. இது உடலில் உள்ள கெட்ட  நச்சுகளை நீக்கும். மேலும், புரோஸ்டேட் புற்றுநோய் உட்பட சில புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் இது உதவுகிறது.

3. கண் பார்வை பராமரிப்பு: புரோக்கோலியில் லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின் போன்ற கரோட்டினாய்டுகள் நிறைந்திருக்கின்றன. இவை நம்முடை கண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்கின்றன. அதோடு இவை கண்புரை மற்றும் மாகுலர் சிதைவு (Macular degeneration) போன்ற வயது தொடர்பான கண் கோளாறுகளின் ஆபத்தைக் குறைக்க உதவுகிறது. இன்னும் ஒரு படி  கூடுதலாக, புரோக்கோலியில் உள்ள பீட்டா கரோட்டின், கண் பார்வை திறனை பராமரிக்க மற்றும் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கவும் செய்கிறது.

4. ஹார்மோன்களின் கட்டுப்பாடு: புரோக்கோலி உடலின் ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாட்டை சமநிலையில் வைக்க உதவுகிறது. குறிப்பாக, ஈஸ்ட்ரோஜன் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது மட்டுமின்றி, மார்பகப் புற்றுநோய் மற்றும் இனப்பெருக்க பிரச்னைகளின் அபாயத்தையும் குறைக்கிறது.

5. சருமப் பளபளப்பு: புரோக்கோலியில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக நிறைந்திருக்கின்றன. இந்த சத்துக்கள் நம்முடைய  சருமத்தில் ஈரப்பதம் குறையாமல்  பாதுகாக்கும். அதோடு, சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து, சரும பளபளப்புத் தன்மையை அதிகரித்து இளமையான  தோற்றத்தையும் அளிக்கிறது.

இதய மாற்று அறுவை சிகிச்சையில் ஒரு புதிய மைல்கல்!

பெண்களுக்கு கைமேல் பலன் தரும் கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு!

ஹரியானாவில் தீப்பிடித்து எரிந்த சுற்றுலா பேருந்து… 8 பேர் பலி!

தொலைதூரப் பயணங்கள் முடிவதில்லை… தொடரும்…!

பிக்மேலியன் விளைவால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரியுமா?

SCROLL FOR NEXT