Jaathipathiriyin Arokiya Nalan Theriyumaa? https://www.indiamart.com
ஆரோக்கியம்

சமையலுக்கு மணமூட்டி; ஆரோக்கிய வழிகாட்டி: ஜாதிபத்திரி பற்றி தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

ஜாதிபத்திரி நறுமணம் மிக்க ஒரு மசாலா பொருள் மட்டுமல்ல; இதில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன. சமையலில் சுவை கூட்ட மட்டுமல்ல, இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அழகையும் அள்ளித் தருகின்றது.

1. தூக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு மிகச்சிறந்த மருந்து ஜாதிபத்திரி. இது மனதை அமைதிப்படுத்தி நல்ல உறக்கத்திற்கு உதவுகிறது. மேலும். மனப்பதற்றம் இருப்பவர்களும் இதை எடுத்துக் கொள்ளலாம்.

2. ஜாதிபத்திரியை அரைத்து முகத்தில் பூசினால், சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாத்து பளபளப்பாக வைக்கிறது.

3. உடல் எடையை குறைப்பதில் இது பெரும் பங்கு வகிக்கிறது. உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை அகற்றி  உடலை கட்டுக்கோப்பாக வைக்கிறது.

4. கால்சியம் குறைபாட்டின் காரணமாக எலும்புகள் பலவீனமடைந்து மூட்டு வலி, கீல்வாதம் ஆஸ்டியோபோரசிஸ் போன்றவை வருகின்றன. இத்தகைய அபாயங்களை தவிர்க்க ஜாதிபத்திரியை எடுத்துக் கொள்ளலாம். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட் மேற்கண்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கின்றது.

5. செரிமானத்திற்கு இது மிக உகந்தது. வயிற்று வலி மற்றும் மலச்சிக்கலுக்கு சிகிச்சை அளிக்கிறது. மேலும் பசியையும்  தூண்டுகிறது.

6. குளிர்காலத்தில் சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கு ஜாதிபத்திரி சிறந்த மருந்து.

7. சிறுநீரகம் தொடர்பான வியாதிகளுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. சிறுநீரகம் நன்றாக செயல்பட உதவுகிறது.

8. இதில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியல் பண்புகள் பற்களை பாதுகாக்கின்றன. ஈறுகளையும் ஆரோக்கியமாக வைக்கின்றன.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் மட்டும் ஜாதிபத்திரியை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

குளிர் காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான மொறு மொறு பக்கோடா வகைகள்!

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

SCROLL FOR NEXT