Juices to drink for menstrual pain and cramps https://www.cosmo.ph/health
ஆரோக்கியம்

மாதவிடாய் சமய வலி மற்றும் பிடிப்பு நீங்க அருந்த வேண்டிய ஜூஸ்கள்!

ஜெயகாந்தி மகாதேவன்

மாதவிடாய் (menstruation) என்பது பெண்களின் டீனேஜ் பருவத்தில்  ஆரம்பித்து,ஒரு குறிப்பிட்ட காலம் வரை தொடர்ந்து மாதம்தோறும் மூன்று நாட்கள் அவர்கள் உடல் நிலையில் ஏற்படும் தவிர்க்க முடியாததொரு மாற்றமாகும். அந்த மாதிரி நேரங்களில் பெண்கள் உடல் வலி மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ள நேர்வது சகஜம். அப்போது சக்தியை அதிகரிக்க என்னென்ன பழச்சாறுகளை அருந்தலாம் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

96 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரி ஜூஸ் அருந்துவது சோர்வையும் சுறுசுறுப்பின்மையையும் நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும். உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை வழங்கவும் வீக்கத்தைக் குறைக்கவும் செய்யும்.

ஆப்பிள் மற்றும் செலரி (Celery) இரண்டையும் கலந்து தயாரிக்கப்படும் ஜூஸ்,  மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் இரும்புச் சத்தின் இழப்பை சரி செய்து, மீண்டும் சமநிலைக்கு கொண்டுவந்து நிறைவான ஆரோக்கியம் பெற உதவும்.

மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் சக்தியின் இழப்பை பீட்ரூட் மற்றும் ஆரஞ்சு கூட்டணியில் தயாரிக்கப்படும் ஜூஸ் சமநிலைப்படுத்தும். இதிலுள்ள இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் ஆசிட் ஊட்டச்சத்துக்களை அளித்து அதிக சக்தி கிடைக்க உதவுகின்றன.

இயற்கையாக உப்புத்தன்மை கொண்ட செலரி ஜூஸ் அருந்தும்போது, உடலின் நீர்ச்சத்து குறையாமலிருக்கவும், தசைகளில் பிடிப்பேதுமின்றி அதன் செயல்பாடுகள் நார்மலாக இருக்கவும்  செய்ய முடியும்.

க்ரான்பெரி ஜூஸில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது வலி குறைய உதவும்.

மஞ்சள் ஜூஸ் (Haldi Juice) ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட் குணங்கள் கொண்டது. இவை மாதவிடாய் நேரத்து தசைப் பிடிப்பைத் தடுக்கும்.

ஜிஞ்சர் லெமனேடில் உள்ள ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணமானது தசைகளில் ஏற்படும் வலியை குறைக்கும்.

கேரட் மற்றும் ஆரஞ்சு சேர்த்து தயாரிக்கப்படும் ஜூஸ் கர்ப்பப்பை தசைகளை தளர்த்தி, கருத்தரிப்பு சம்பந்தப்பட்ட உறுப்புகளின் ஆரோக்கியம் பாதுகாக்க உதவி புரிகிறது. மாதவிடாய் நேரத்து அசௌகரியங்களையும் நீக்குகிறது.

பெண்கள் தங்களுக்குத் தேவைப்படும் நேரங்களில் மேற்கூறிய ஜூஸ்களை அருந்தி ஆரோக்கியம் பெறலாம்.

சின்ன விஷயங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தின் அவசியம் தெரியுமா?

ஸ்ரீ சத்யசாயி பாபாவின் பொன்மொழிகள்!

நேர்மறை உணர்வோடு (Positive feeling) பயணியுங்கள்..!

வெண்ணெய் (Butter jeans) ஜீன்ஸின் தனித்துவம் தெரியுமா?

தினமும் காலை வெண்பூசணி ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?

SCROLL FOR NEXT