பூவரசு மரம் 
ஆரோக்கியம்

காயகல்ப மருந்தாகப் பயன்படும் பூவரசன் மரம்!

கலைமதி சிவகுரு

பூவரசு மரம் சாதாரண பூவரசு மற்றும் கொட்டை பூவரசு என இரு வகைப்படும். சாதாரண பூவரசு மரத்தில் விதைகள் இல்லாமல் சப்பையான காய்களாக காய்க்கும். கொட்டை பூவரசு மரத்தில் காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். ‘பூவுக்கெல்லாம் அரசன்’ போல் நோய் தீர்க்கும் மருந்தாக இருப்பதால் இதன் பெயர் பூவரசு என்று அழைக்கப்படுகிறது. நூற்றாண்டுகளைத் தாண்டி வாழக்கூடிய மரங்களுள் பூவரசுவும் ஒன்று. பூவரசு மரம் ஏராளமான மருத்துவப் பயன்கள் கொண்ட மரமாகும்.

1. விஷக்கடிக்கு: பூவரசம் இலைகளுக்கு விஷத்தைப் போக்கும் தன்மை இருப்பதால் பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டு கடிகளுக்கு, மருந்தாக சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வந்தனர்.

2. பொடுகு நீங்க: சொறி, சிரங்கினால் அவதிப்படுபவர்கள் பூவரசம் பூவை அரைத்து அவற்றின் மீது பூசி வந்தால் சொறி, சிரங்கு குணமடையும். சருமம் மென்மையாகும்.

3. மூட்டு வீக்கம்: வயதானவர்கள் மூட்டு பகுதியில் நீர் கோர்த்து வீக்கத்தால் அவதிப் படுவார்கள். இதற்கு பூவரசம் பூவுடன் சம அளவு காய் பட்டை எடுத்து அரைத்து நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி மூட்டு வீக்கங்கள் மேல் பூசி வர. வீக்கம் குணமடையும்.

4. காய ஸித்தி: பூவரசம் மரத்தின் பட்டையை இடித்து சாறு எடுத்து மூன்று மண்டலங்கள் அருந்தி வந்தால் காயஸித்தி கிடைக்கும். ஆண், பெண் இருபாலரும் அருந்தலாம்.

5. கருத்தரிப்பை தடுக்க: பூவரசம் பட்டையை காய வைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிடுவது கருத்தடை சாதனத்திற்கு இணையானது. கருப்பை கோளாறுகளையும் நீக்கும்.

6. கல்லீரலைப் பாதுகாக்க: உடலின் செயல்பாட்டிற்கு ஊக்க சக்தியை அளிப்பது கல்லீரல்தான். இந்த கல்லீரல் பாதிக்கப்பட்டால் பல நோய்களை சந்திக்க நேரிடும்.  கல்லீரலை பலப்படுத்தக்கூடிய சக்தி இதற்கு உண்டு. கல்லீரல் பலவீனம்தான் மஞ்சள் காமாலை நோயின் தாக்கம்.

7. மஞ்சள் காமாலை: பூவரச மரத்தின் பழுத்த இலை இரும்பு சத்து நிறைந்தது. பழுத்த இலைகளுடன்1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்து குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும். மேலும், பூவரசம் காய்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் வயிற்றுப் புண்களை குறைக்கும். வெள்ளைப்படுதலை போக்கும், சரும வியாதிகளை அகற்றும்.

8. தொழு நோய்: நூறு வருடமான பூவரசு மரத்தின் வேரை நன்கு உலர்த்தி பொடி செய்து முறைப்படி உண்டு வந்தால் தொழுநோய் குணமாகும். இது குறித்து கும்பமுனி சித்தர் பாடிய பாடல் ஒன்று உள்ளது.

‘நூறாண்டு சென்றதொரு நுண் பூவரசம் வேர்
நூறாண்டு குட்டை தொலைக்குங் காண் – வீறிப்
பழுத்த இலை, விதை, பூ, பட்டை இவை கண்டால்
புழுத்த புண் விரேசனமும் போம்’

பூவரசு புழுக்களைக் கொன்று நம் உடலை தூய்மையாக்கி உடலை உரமாக்கும் தன்மை உடையது. கிராமங்களில் வீடுகளின் முற்றத்திலும், தோட்டங்களிலும் பூவரசு மரம் இன்றும் இருப்பதைக் காணலாம். பூவரசு மரம் அதிக அளவு ஆக்சிஜனை உற்பத்தி செய்வதினால் நாம் இந்த மரத்தினை நமது வீடுகளில் வைத்திருப்பதன் மூலம் நம்மால் தூய்மையான காற்றை சுவாசிக்க முடியும்.

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT